பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுங்கள் முரசாக, தொன்று தொட்டுத் தழைத்துவரும் பண்பாடு கவச மாக, உமதறிவே படைக்கருவி யாக, போற்றும் ஒழுக்கமொன்றே துணையாகக் கொண்டு வாழ்வீர் இமைப்பொழுதும் ஊக்கத்தைக் கைவி டாமல் இடர்களைவீர்! தாயகத்தைக் காப்ப தற்குச் சிமிட்டாத கண்ணுடையர் ஆவீர் கற்றுச் சென்றிடுவீர் வென்றிடுவீர்! வாழ்க நீவிர்! கடிதங்கள் வேனில் வேதனை! இந்திர விழாக் கடற்கரை. கொழுந்து மாதவிக்கும் அவள் மார்பில் அழுந்தும் கோவலனுக்கும் யாழ்ப்பூசல் நடக்கிறது. பாட்டடி பட்டுப் பதைத்துப் பிரிகிறான் பட்டினக் கோவலன். அவன் இரும்பு நெஞ்சைக் கரும்பு நெஞ்சாக்கக் கடிதம் எழுதுகிறாள் கணிகைக் காதலி. செவ்வேளே! எனைப்பி ரிந்த சினவேளே! இரண்டு காலில் எவ்வாறு நிற்கும் கட்டில்? இரண்டுசீர் ஒன்றோ டொன்று கவ்வாமல் பிறப்ப துண்டா காவியம்? ஊடல் செய்ய இவ்வேளை ஏற்ற தில்லை. இளவேனில் வந்த தாலே. கவிஞர் முருகுசுந்தரம் 284