பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதிமுறி (WILL) கங்கையின் காதலன் பண்டித நேரு அவர்கள் சிறந்த இலக்கிய அறிஞர்; வரலாற்றாசிரியர்; ஆங்கில மொழியை நாடித் துடிப்பறிந்து நடத்தும் ஆற்றல் மிக்க எழுத்தாளர்; உருதுமொழியில் கவிதை எழுதும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். இவர் இந்திய மக்களுக்கு விட்டுச் சென்ற இறுதி முறி (Will) ஒரு சுவையான இலக்கியம். அதைக் கவிதை வாகனத்தில் ஏற்றியிருக்கிறேன் துள்ளுநீர் பாயுங் கங்கை தோன்றுமென் னாட்டார் என்னை உள்ளத்தில் சிலையாய் வைத்தார்; ஊற்றெடுத் தொழுகு மன்பு வெள்ளத்தில் மூழ்க டித்தார்; வேறதற் கீடாய் நானோ எள்ளள வன்பைக் கூட இன்னமுங் கொடுக்க வில்லை. ஏற்றத்தைப் போல ஏறி இறங்கிடும் என்றன் மூச்சுக் காற்றுள்ள வரையில் சற்றும் கண்துஞ்சல் இன்றி, நாட்டார் போற்றிடும் தொண்ட னாவேன் புகழுக்கும் நம்பிக் கைக்கும் ஆற்றிடும் அன்பி னுக்கும் அருகனாய் நடந்து கொள்வேன். முருகுசுந்தரம் கவிதைகள் 303