பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிக்கின்ற வைதீகப் படையைப் போக்கும் அருமருந்து பெரியாரே, இவர் வயிற்றில் செரிக்காத உணவுமில்லை; இவர் நுணுக்கச் சிந்தனைகள் துளைக்காத துறையு மில்லை. இருக்கின்ற காலத்தில் இந்த நாட்டில் இவரைப்போல் புகழ்பெற்ற தலைவர் இல்லை. இறப்பதற்கு முன்பாக இந்த நாட்டில் இவரைப்போல் சாதித்தோர் எவரு மில்லை. என்றும் வாழும்!க துடிக்கின்ற நெடும்பகையை வாவா என்று துள்ளுகின்ற சுடர்வாள்போல் முறுக்கு மீசை! வெடிக்கின்ற இடியோடு கனலைக் கக்கி விழிக்கின்ற மின்னலைப்போல் இமைக்கும் கண்கள்! படிக்கின்ற திருக்குறளின் ஏட்டைப் போலப் பக்குவமாய் அறங்கூறும் அறிவு நெற்றி! வடிக்கின்ற தேனைப்போல் இனிக்கும் பேச்சு வாய்த்தபெருங் கவிஞனடா எட்டை நாட்டான். இனிமேலோர் தேனில்லை இனிமை செய்ய இனிமேலோர் குயிலில்லை இனித்துக் கூவ இனிமேலும் இசையலைகள் எழுப்பிக் காட்ட இவ்வுலகில் வீணையில்லை; எழும்பிச் சீற இனிமேலும் எரிமலைகள் எங்கும் இல்லை எனும்படியாய் இளஞ்சிரிப்புக் கண்ணன் பாட்டை இனிக்கின்ற குயிற்பாட்டைப் பாப்பா பாட்டை எழுச்சிமிக்க கீதத்தை இசைத்துத் தந்தான். + ஆனந்த விகடன் பாரதி மலரில் பரிசு பெற்ற முதற்பாடல் கவிஞர் முருகுசுந்தரம் 314