பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலர் அவளுடைய அறியாமை என்றும், சிலர் சந்தர்ப்ப சூழ்நிலை என்றும் காரணம் கூறுகின்றனர். இந்தப் புதிர் இலக்கியவாதிகளின் கற்பனையைத் தூண்டிவிட்டு, சுவையான புதுப்புனைவுகளுக்கு வழி வகுத்தது. சர்ரியலிசக் கற்பனை என் முயற்கி. நான் மிகவும் நிதானமாகச் சிந்தித்து அகலிகை பற்றிய எல்லா ஆதாரங்களையும் தேடிப்பிடித்து, இக் காப்பியத்தை எழுதியிருக்கிறேன். இக் கற்பனை என் உள்ளத்தில் முதன்முதலில் கருக் கொண்டபோது, ஆங்கிலப் பேராசிரியரும், கவிஞரும், தமிழகத்தின் தலைசிறந்த புதுக் கவிதைத் திறனாய்வாளரும், சர்ரியலிசத்தைத் தமிழ்க் கவிதைச் சுவைஞர்களுக்குத் தமது சிறந்த நூலின் மூலம் அறிமுகப்படுத்தியவருமான டாக்டர் பாலாவோடு தொடர்பு கொண்டேன், சர்ரியலிசத்தின் பல நுட்பங்களையும் எனக்கு எடுத்துக் கூறியதோடு படிப்படியான என் காவிய வளர்ச்சியிலும் ஆலோசனை கூறி அக்கறை காட்டினார். இக்காவியம் வெற்றி பெற்றிருந்தால், அதற்கு டாக்டர் பாலாவின் வழிகாட்டலும் ஒரு காரணம். காவியம் முடிந்தவுடன் இதற்கு ஒர் ஆய்வுரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார். அவர் என்றும் என் நன்றிக்குரியவர். 口 முருகுசுந்தரம் கவிதைகள் 41