பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏதேன் தோட்டத்துப் பாம்பு! கேட்பவர் உள்ளத்தைப் பட்டுக் கயிற்று முடிச்சால் சுருக்கிட்டுத் தொங்கவிடும் பிளவுபட்ட உன் தத்துவ நாக்கை ஆண்டவனாலும் அறுக்க முடியவில்லை. நீ - ஏவாளின் காதுகளில் இன்னிசை வீணையை மிழற்றும் போது, சாபக் கனிகளுக்குக் கட்டியம் கூறும் உன் நச்சுப் பற்களைச் சாமர்த்தியமாக மறைத்துக் கொள்கிறாய். நீ - பார்வையாலேயே நஞ்சைக் கொட்டும் திட்டி விடம். உன் - கண்வலையில் சிக்கி வசியப்பட்டு நாங்கள் வசமிழக்கிறோம். சட்டையை உரிப்பது உன் பிறவிக் குணம் என்பதை அறியாத நாங்கள், நீ அடிக்கடி ஆன்மீக நெருப்பில் குளித்துவிட்டு அருட்பிழம்பாய்க் காட்சி தருவதாக அதிசயித்து நிற்கிறோம். கவிஞர் முருகுசுந்தரம் 44