பக்கம்:முல்லைக்கொடி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ↔ புலவர் கா. கோவிந்தன்

வாலிது கிளர்ந்த வெண்கால் சேயும் கால முன்பின் பிறவும் சால, மடங்கலும், கணிச்சியும் காலனும் கூற்றும் 20 தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணரீஇய உடங்கு கொட்பனபோல் புகுத்தலும் தொழுஉ;

அவ்வழி,

கார்எதிர் கலிஒலி கடிஇடி உருமின் இயம் கறங்க, ஊர்புஎழு கிளர்புஉளர் புயல் மங்குலின் நறைபொங்க, 25 நேரிதழ் நிரைநிரை வெறிவெறிக் கோதையர் அணிநிற்பச் சீர்கெழு சிலைநிலைச் செயிர்இகல் மிகுதியிற் சினப்

பொதுவர்

தூர்புஎழு துதைபுதை துகள் விசும்புற வெய்த ஆர்புடன் பாய்ந்தார் அகத்து.

மருப்பிற்கொண்டு மார்புஉறத் தழிஇயும், 30 எருத்திடை அடங்கியும் இமில் இறப் புல்லியும், தோளிடைப் புகுந்தும், துதைந்து பாடேற்றும் நிரையுமேல் சென்றாரை நீள்மருப்புறச் சாடிக் கொள இடங் கொளவிடா நிறுத்தன ஏறு.

கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் 35

. சாக்குத்திக் கொள்வார்ப் பெறாஅக் குரூஉச்செகில் காணிகா, செயிரிற் குறை நாளால் பின்சென்று சாடி உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம். பாடேற்றவரைப் படக்குத்திச் செங்காரிக் கோடெழுந்து ஆடும் கண்மணி காணிகா, 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/102&oldid=707946" இலிருந்து மீள்விக்கப்பட்டது