பக்கம்:முல்லைக்கொடி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி 99

இவ்வாறு, நகைத்தவாறே, இருவரும், ஊர் நடுவே இருந்த மன்றத்தை அடைந்தனர்: ஊர்ச்ரோடு கூடிக் குரவை ஆடி, "எம் நாடு வளம் கொழிப்பதாக! இந் நாடாளும் நல்லோன் முரசு, சென்று இமையத்திற்கு அப்பால் உள்ள நாடுகளிலும் முழங்குக!” எனவும், "அவனுக்கு அவ்வெற்றி வாய்க்குமாறு, பாற்கடலில் பாம்பனைமீது பள்ளி கொண்டிருக்கும் நேமிப்படை யேந்திய நீலவண்ண நெடியோன் அருள் புரிவானாக!” எனவும் பாடி இறைவனை வழிபட்டு வீடடைந்தனர்.

"அரைசுபடக் கடந்து அட்டு ஆற்றில் தந்த முரைசுகெழு முதுகுடி முரண்மிகு செல்வதற்குச் சீர்மிகு சிறப்பினோன் தொல்குடிக்கு உரித்துஎனப் பார்வளர் முத்தமொடு படுகடல் பயந்த ஆர்கலி உவகையர் ஒருங்குடன் கூடித், 5 தீதின்று பொலிக எனத் தெய்வக் கடி அயர்மர் விவில் குடிப்பின இருங்குடி ஆயரும் தாவில் உள்ளமொடு துவன்றி ஆய்புடன் வள்ளுருள் நேமியான் வாய்வைத்த வளைபோலத் தெள்ளிதின் விளங்கும் சுரிநெற்றிக் காரியும், 10

ஒரு குழையவன் மார்பில் ஒண்தார் போல் ஒளிமிகப் பொருவறப் பொருந்திய செம்மரு வெள்ளையும், பெரும் பெயர்கணிச்சியோன் மணிமிடற்று அணிபோல இரும்பினர் எருத்தின் ஏந்துஇயில் குராலும்;

அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் 15 கணங்கொள் பல்பொறிக் கடுஞ்சினப் புகரும் - வேல்வலான் உடைத்தாழ்ந்த விளங்குவெண் துகில்ஏய்ப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/101&oldid=707945" இலிருந்து மீள்விக்கப்பட்டது