பக்கம்:முல்லைக்கொடி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ↔ புலவர் கா. கோவிந்தன்

மலரணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி அலர் செய்து விட்டது இவ்வூர். 65

ஒன்றிப் புகரினத்து ஆயமகற்கு ஒள்ளிழாய்! இன்று எவன் என்னை எமர் கொடுப்பது! அன்று அவன் மிக்குத் தன்மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப் புக்கக்கால் புக்கது என் நெஞ்சு

என, 70

பாடிமிழ் பார்ப்பகத்து அரவணை அசைஇய ஆடுகொள் நேமியான் பரவுதும், நாடுகொண்டு, இன்னிசை முரசின் பொருப்பன் மன்னி அமைவரல் அருவி ஆர்க்கும் இமையத்து உம்பரும் விளங்குக எனவே.” 75

தலைவன் ஏறு தழுவியதைத் தலைவியும் தோழியும் கண்டு மகிழ்ந்து, குரவை ஆடிக் கடவுளை வாழ்த்தியது

1. கடந்து-வென்று அட்டு- அழித்து, ஆற்றில்- அறநெறிப் படி, 4. படுகடல் - ஒலிக்கும் கடல்; 5. ஆர்கலி - மிக்க மகிழ்ச்சி, 6. கடி - விழா, அயர்மார் - செய்வதற்கு, 7. வீவுஇல் - கேடு இல்லாத, இரும் - பெரிய, 8. தாவில் - வருத்தமற்ற, துவன்றி - நிறைந்து, ஆய்பு - ஆராய்ந்து, 9. வளை - சங்கு 10. சுரி - சுட்டி. 11. ஒளிதார் - ஒளி வீசும் மாலை. 12. பொருவுஅற - ஒப்பின்றி, மிடறு - கழுத்து 14. இரும் - கரிய, குரால் - கறுமை கலந்த பொன்னிற எருது, 16. புகர் - செந்நிற எருது, 18. வாலிது- நன்றாக, கிளர்ந்த- உயர்ந்த, 19. காலமுன்பின் - காலன் வலி போலும் வலி. 20 மடங்கல் - ஊழித்தி, கணிச்சி-அழிக்கும் படை கூற்று- காலனின் ஏவலாளன், 21. துவன்று உயிர் - மிகப்பலவாகப் பல்கிய உயிர் வகைகள், உணிஇய- உண்ண வேண்டி 22. உடங்கு - ஒன்றுகூடி, கொட்பன - சுழன்று திரிவன 24. உருபு - இடியேறு, இயம் - பறைகள், கறங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/104&oldid=707948" இலிருந்து மீள்விக்கப்பட்டது