பக்கம்:முல்லைக்கொடி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. {09

"ஏடி! தோழி! கொல்லேற்றின் கோடு கண்டு ஆயன் அஞ்சுவதும், கொல்லேறு கண்டு அஞ்சுவான் தோளை ஆய்ச்சி காதலிப்பதும் ஆயர்குடிப் பிறந்தார் அறியாத நிகழ்ச்சிகள் அல்லவோ?’ எனக் கூறிப் பாடினாள், குலப்பெருமை குன்றாக் குணம் உடையாள் ஒரு பெண்.

புகழாசை மிக்க ஒரு பெண், "தோழி! மணந்து மனையறம் மேற்கொண்ட நாள் முதலாக, இன்றுவரை, ஒரு நாளேனும் என் கணவர் என்னைப் புறம்போக விட்டாரல்லர்; அவர் அன்பு அத்துணைப் பெரிது! ஆனால், மோர் விற்கும் பணிமேற்கொண்டு புறத்தே சென்று, ஆங்கு என்னைக் காணும் இவ்வூரார், அடங்காது திரிந்த அடலேற்றை அடக்கியவன் இவள் கணவன்! என என் கணவரைப் புகழ்ந்து கூறும் சொற்களை, ஒரு நாளேனும் கேட்டு மகிழ மாட்டேனா என ஆசைப்படு கிறது என் உள்ளம். தோழி! அந்நல் வாய்ப்பு என்றேனும் ஒருநாள் எனக்கு வாய்க்குமோ?” எனக் கூறிப் பாடினாள்.

அவருள் முதியாள் ஒர் ஆய்ச்சி, "தோழியீர்! குலப் பெருமை பாடியது போதும், இனி நம் காளைகளையும், காதலரையும் கேடுறாவாறு காக்கும் திருமால் உறையும் காட்டைப்பாடி, நாம் பகைவர் பயம் அற்றுப் பேரின்பப் பெருவாழ்வு பெற்று வாழத் துணை புரியும் தென்னவன் கொற்றம் வாழ்க! வளர்க! அதற்கும் அத்திருமால் துணை புரிவானாக! என, அவன் திருவடிகளைப் பணிந்து பரவுவோமாக!" எனக் கூறிப் பாடிக் குரவைக் கூத்தை முடித்தாள்; எல்லோரும் மகிழ்ந்து மனை புக்கனர்.

“கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண் இமிழ்இசை மண்டை உறியொடு தூக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/111&oldid=707955" இலிருந்து மீள்விக்கப்பட்டது