பக்கம்:முல்லைக்கொடி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 புலவர் கா. கோவிந்தன்

ஒழுகிய கொன்றைத் தீங்குழல் முரற்சியர் வழுஉச்சொல் கோவலர் தத்தம் இனநிரை பொழுதொடு தோன்றிய கார்நனை வியன் புலத்தார். 5

அவ்வழி,

நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறேற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்த் துளங்கு இமில் நல்லேற்று இனம்பல, களம்புகும் மள்ளர் வனப் பொத்தன. 10

தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எவ்வாயும் வைவாய் மருப்பினால் மாறாது குத்தலின், மெய்வார் குருதிய ஏறெல்லாம்; பெய்காலைக் கொண்டல் நிரை ஒத்தன.

அவ்வேற்றை, 15

பிரிவுகொண்டு இடைப்போக்கி இனத்தோடு புனத்துற்ைறி, இருதிறனா நீக்கும் பொதுவர், உருகெழு மாநிலம் இயற்றுவான், விரிதிரை நீக்குவான் வியன்குறிப்பு ஒத்தனர்.

அவரைக் கழலஉழக்கி எதிர்சென்று சாடி 20 அழல்வாய் மருப்பினால் குத்தி, உழலை மரத்தைப்போல் தொட்டன ஏறு.

தொட்டதன், புண்வார் குருதியால் கைபிசைந்து

மெய்திமிரித்

தாங்கார் பொதுவர், கடலுள் பரதவர்

அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார் ஏறு. - 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/112&oldid=707956" இலிருந்து மீள்விக்கப்பட்டது