பக்கம்:முல்லைக்கொடி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 111

ஏறுதம் கோலம்செய் மருப்பினால் தோண்டிய விரிக்குடர் ஞாலக்கொண்டு எழுஉம் பருந்தின் வாய்வழிஇ, ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட மாலைபோல் தூங்கும் சினை.

ஆங்கு, 30 தம்புல ஏறு பரத்தர உய்த்த தம் அன்புறு காதலர் கைபிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழுஉ. முயங்கிப் பொதிவேம்; முயங்கிப் பொதிவேம்; முலைவேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம், 35 கொலையேறு சாடிய புண்ணை, எம்கேளே! -

பல்லூழ் தயிர்கடையத் தாஅய புள்ளிமேல் கொல்லேறு கொண்டான் குருதி மறக்குறப் புல்லல் எம் தோளிற்கு அணியோ, எம்கேளே!

ஆங்கு. போரேற்று அருந்தலை அஞ்சலும், ஆய்ச்சியர் 40 காரிகைத்தோள் காமுறுதலும் இவ்விரண்டும் ஒராங்குச் சேறல் இலவோ? எங்கேளே!

கொல்லேறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல்கேளா அளைமாறியாம் வரும் செல்வம் எம்கேள்வன் தருமோ? எங்கேளே! 45

ஆங்க,

அருந்தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச் சுரும்புஇமிர் கானம் நாம் பாடினம் பரவுதும், ஏற்றவர் புலம்கெடத் திறைகொண்டு மாற்றாரைக் கடக்க எம்மறங்கெழு கோவே." 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/113&oldid=707957" இலிருந்து மீள்விக்கப்பட்டது