பக்கம்:முல்லைக்கொடி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இல் புலவர் கா. கோவிந்தன்

ஆயர் தத்தம் ஆனிரையோடு புகக்கண்ட ஆய்ச்சியர், மகிழ்ந்து குரவைக் கூத்தாடியது இது.

1. கழுவு-காளைகளை அடக்க அவற்றின் கழுத்தில் பிணிக்கும் கிட்டி 2. இமிழ் இசை மண்டை - இமிழ் எனும் ஒலி எழுமாறு சுரண்டப்படும் கறவைக்கலம். 4. வழுஉச்சொல் - 'எய் எய்' எனும் குறிப்புச் சொல். பொருள் குறியாமையின் வழுவாயிற்று. 8. சிலைத்தல் - ஒலித்தல். 9, 10, இனம், எழுவாய் ஒத்தன, பயனிலை, வைவாய் - கூரியமுனை, 15. காலைக் கொண்டல் - காலையில் எழும் மேகம், 18 இயற்றுவான் - நான்முகன். 19. விரிதிரை - கடல், 20. கழல - ஒடும்படி, 22. தொட்டன - துளைத்தன, 24. தங்கார் - ஓய்ந்திராது. 24. பரதவர் - நெய்தல் நிலத்தார், 25. அம்பி - மீன்படகு 27. ஞால - தொங்க. வழிஇ- வழுக்கி. 28. விலங்கிட்ட - குறுக்காகச் சூட்டிய 29. தூங்கும் - தொங்கும், 35. வேதின் - வெம்மையால், 41. காரிகைத் தோள் - கொல்லேறு அஞ்சிப் புண்படாது தோன்றும் அழகிய தோள் என இகழ்ச்சிக் குறிப்பாய்க் கூறப்பட்டுள்ளது. 44. அணைமாறி-மோர் விற்று,48. சுரும்பு- வண்டு, இமிர் - ஒலிக்கும், 49. ஏற்றவர் - பகைவர்; ஏற்றவர் புலம்கெட - பகைவர் நிலம் எனும் பெயர் கெட, அதாவது அதைத் தனக்கு உரித்தாக்கிக் கொள்ள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/114&oldid=707958" இலிருந்து மீள்விக்கப்பட்டது