பக்கம்:முல்லைக்கொடி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

அவன் கண்ணி அன்றோ !

ஆயர்கள், அவரவர் விருப்பத்திற்கேற்பச் சிலர் ஆடுகளையும், சிலர் மாடுகளையும், சிலர் எருமைகளையும் மேய்ப்பதால், முறையே, புல்லினத்து ஆயர், நல்லினத்து ஆயர், கோட்டினத்து ஆயர் எனத் தனித் தனியே பெயரிட்டு அழைக்கப் பெறினும், அவர் வாழ்வு முறையில் ஒரு சிறு வேறுபாடும் இடம் பெறவில்லை. உண்ணல் உறவு கொள்ளல் ஆகிய நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்தே வாழ்ந்தனர். அத்தகைய ஆயர் குடியில் பிறந்த ஒரு பெண்ணும், ஒர் இளைஞனும் ஒருவரை யொருவர் காதலித்தனர்; பிறர் காணக்கூடாத இடங்களில், தனித்துக் கண்டு மகிழ்ந்தனர்; அவர் காதல் வளர்ந்தது. ஆனால், களவு வாழ்க்கை இடையூறு மலிந்திருப்பது கண்டு, இருவரும் வருந்தினர்; அச்சமற்று மகிழ்வதற்கு இல்லையே என எண்ணிக் கவலைகொண்டனர்; பலர் அறிய மணந்து கொண்டு, மனையறம் மேற்கொள்ளும் அந்நாளை ஆர்வத்தோடு எதிர் நோக்கியிருந்தனர்.

முல்லை-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/115&oldid=707959" இலிருந்து மீள்விக்கப்பட்டது