பக்கம்:முல்லைக்கொடி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இ. புலவர் கா. கோவிந்தன்

அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அவள் பெற்றோ ரும், அவ்வூரைச் சார்ந்த பிற மகளிரின் பெற்றோர்களும் மணமுயற்சி மேற்கொண்டனர். ஒரு நாள் ஊரைக் கூட்டி, "எம் மகளிரை மணக்க விரும்பும் மாப்பிள்ளைமார், அவரவர்க்கென நாங்கள் வளர்த்து வரும் எருதுகளை அடக்கித் தழுவ முன் வருவர்களாக!" என அறிவித்தனர்.

ஏறு தழுவும் நிகழ்ச்சி தொடங்கிற்று; ஏறுகள் தொழுவினுள் விடப்பெற்றன; ஊரார் ஒன்று திரண்டு வந்து, தொழுவைச் சுற்றிக் கட்டியிருந்த பரண்மீது அமர்ந்தனர்; அவர்மகளிரை மணக்க முன்வந்த இளைஞர் கள், அவரவர் விரும்பும் மகளிர்க்குரிய காளைகளைத் தேர்ந்து அடக்க முனைந்தனர். முன்னர் நாம் கண்ட இளைஞனும் தொழுவினுள் நுழைந்தான்்; நுழைந்தவன், காதலிக்குரிய காளை, செவியில் மறு விளங்கும், சினத்தில் மிகுந்த புகர் நிறக் காளை என அறிந்து, அதன் முன் சென்று, தன் ஆற்றலெல்லாம் காட்டி அடக்கி நிறுத்தினான். அக் காட்சியைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அப்பெண்; அவள் வாழ்வு, அவன் வெற்றி தோல்விகளில் அடங்கியிருந்தமையால், அவள் கண்ணும் கருத்தும், அவன் மீதும், அக் காளை மீதுமே நிலைத்து நின்றன. அவன் அதை அடக்கி விட்டான். அதைக் கண்ட அவள் மகிழ்ச்சி அளவு கடந்து விட்டது; அவள் தன்னை மறந்தாள். அந்நிலையில், முல்லை மலர் கொண்டு கட்டி, இளைஞன் குடுமியில் வளைத்து வனப்புறச் சூட்டியிருந்த மாலையை, அடக்கிவிட்டானே என்ற ஆத்திர மிகுதியால் அறிவிழந்து போன அக்காளை, தன் கோடுகளில் மாட்டி ஈர்த்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/116&oldid=707960" இலிருந்து மீள்விக்கப்பட்டது