பக்கம்:முல்லைக்கொடி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் ೧ಹಗy ↔ 115

ஆட்டி அலைக்கழித்தது; கோட்டிலே சிக்குண்டு அலைக்கப் பெற்ற அம்மாலை, திடுமென அறுத்துக் கொண்டு, துள்ளி வந்து, பரண்மீது அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த அப் பெண்ணின் கூந்தலில் வீழ்ந்தது. மகிழ்ச்சியால் தன்னை மறந்திருந்த அப்பேதைப் பெண், இழந்த ஒரு பொருளை மீண்டும் பெற்றவர். அப் பொருள் மீது பேரன்பு காட்டி, அதைப் பேணி வைப்பதுபோல், அம்மாலையை ஆர்வமோடு எடுத்து, அன்போடு கூந்தலிற் சூட்டிக் கொண்டாள்.

இந்நிலையில் விழா முடிந்தது; அவள் தன்னை உணர்ந்தாள்; நாற்புறங்களிலும் ஊராரும் உறவினரும் சூழ்ந்திருக்கக் கண்டாள்; தன்மீது வந்து வீழ்ந்த அவன் மாலையைத் தான்் எடுத்துச் சூட்டிக் கொண்டதை இவர் பார்த்திருப்பரோ? பார்த்தவர்கள் அதைத் தாயிடம் கூறியிருப்பரோ? தாய் நனிமிகச் சினப்பளோ என்ற அச்சம் அவளைப் பற்றி அலைக்கழித்தது. அந்நிலையில் . ஆங்கு வந்தாள் தோழி. அவளை, அப்பெண், அன்போடு தழுவிக்கொண்டு, தன் காதலையும், காதலால் கருத்திழந்து தான்் செய்த பிழையையும் அவள்பால் கூறித், "தோழி! இதற்கு என்ன செய்வது? தாயின் சினத்தை எவ்வாறு தடுப்பது? வழியொன்று கூறுவாயாக!” என அழுது வேண்டினாள். - .

அவள் கூறா முன்பே, அனைத்தையும் அறிந்திருந் தாள் தோழி; அது மட்டுமன்று. அவளை அவனுக்கே மணம் செய்து கொடுக்கப் பெற்றோர் இசைந்திருப்பதை யும் அறிந்திருந்தாள். அதனால், அப்பெண் கூறியன. கேட்டுச் சிறிதும் நடுங்காது, நகைத்தவாறே, "ஏடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/117&oldid=707961" இலிருந்து மீள்விக்கப்பட்டது