பக்கம்:முல்லைக்கொடி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 & புலவர் கா. கோவிந்தன்

பெண்ணே ! மாலை உன்னை மணக்கப் போகும் அவனுடையதுதான்ே? பின், ஏன் இவ்வாறு அஞ்சுகிறாய்? தாய் அறியட்டுமே! அதற்கு நாமேன் அஞ்ச வேண்டும்? அதற்காக நீ சிறிதும் கவலைப்படாதே!” என்றாள்.

கவலையற்றுக் கூறிய தோழியின் சொற்கள், அப் பெண்ணின் கவலையை மேலும் மிகுத்தன. "தோழி, சூடும் பூ இது, சூடாப்பூ இது என மலர்களின் இயல்பறிந்து பறித்துச் சூடத் தெரியாத இளமைப் பருவத்தளாய தன் மகள், யாரோ ஒர் இளைஞன் கட்டித் தந்த கண்ணியைச் சூட்டிக் கொண்டாள் என்பதை ஒரு தாய் அறியின், சினவாது இருப்பாளோ? அச் சினத்தைப் போக்க நாம் ஏதேனும் வழிகாண வேண்டாவோ?’ என்று அஞ்சி அஞ்சி வினவினாள்.

அஞ்சும் அவள் நிலை கண்ட தோழி, "பெண்ணே! போகப் போக எல்லாம் சரியாகி விடும்; நீ சிறிதும் அஞ்சாதே!” எனக் கூறித் தேற்றினாள்; அது கேட்ட அப்பெண், "ஓ ஒ! அப்படியா!" என வியந்து, "தோழி! நீ கூறுமாறு, செய்த தவறு எவ்வாறு சரியாகிவிடும்? அதைச் சிறிது விளங்கக் கூறு," என வேண்டிக் கொண்டாள்.

அதற்குத் தோழி, "ஏடி! அவனும் ஆயன்; நீயும் ஆயர்குடி வந்தவள்; அவன் உன்னைக் காதலிக்கிறான்; நீயும் அவனைக் காதலிக்கிறாய். அங்ங்னமாயின், இதில் தாய் கோபிப்பதற்கு என்ன உள்ளது?’ என்று கேட்டாள். அவ்வாறு கூறிய தோழியின் நல்ல மனத்தை அறிந்து கொண்ட அவள், "தோழி! தாய் உள்ளம், உன் உள்ளம் போல், நல்லுள்ளமாயின், நாம் வருந்த வேண்டியதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/118&oldid=707962" இலிருந்து மீள்விக்கப்பட்டது