பக்கம்:முல்லைக்கொடி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 117

உன் நல்ல மன்ம் நம் தாய்க்கு உண்டாக வேண்டுமே!’ எனக் கூறிக் கவலைப்பட்டுக் கொண்டாள்.

அவள் கவலை கண்ட தோழி, "பெண்ணே! நான் இவ்வளவு ஆறுதல் கூறியும், உன் அச்சம் அகலவில்லை; ஒன்று கூறுகிறேன், கேள். காதல் கொள்பவர் தாயின் சினம் கண்டு அஞ்சுவது கூடாது; தாய்க்கு அடங்கிய பெண்ணாய் வாழ்பவள் காதல் கொள்ளக் கூடாது! நீயோ அவனையும் காதலிக்கிறாய்; தாயின் சினத்திற்கும் அஞ்சுகிறாய். அங்ங்ணமாயின், உன் காதல் நோய்க்கு மருந்து காணல் அரிதினும் அரிதாம்!” எனக் கூறினாள்.

துணைபுரிவாள் என நம்பிய தோழியும் கைவிடவே, அவள் அச்சம் அதிகமாயிற்று. "தோழி! என் காதல் நோய்க்கு மருந்து இல்லையாயின், நான் இவ்வாறே வருந்தி அழிய வேண்டியதுதான்ா?” எனக் கூறிக் கண்ணிர் விட்டாள். -

இனியும் உண்மையை மறைத்தால், இவள் உள்ளம் உடைந்துவிடும் என உணர்ந்த தோழி, "பெண்ணே!,மாசு போக நீராடி, நெய் பூசப்பெற்ற நின் நீண்ட கூந்தலில், நம் காளை, அவன் கண்ணியைப் பறித்து எறிந்தது என்ற செய்தியை நம் பெற்றோர் அறிந்தது உண்மை; ஆனால், அஃது அறிந்து அவர்கள் சினம் கொண்டிலர்; மாறாக, அது, இவனே இவள் கணவன் எனத் தம் குலதெய்வமாய திருமால் நேர்நின்று காட்டியதாகக் கருதினர்; அதனால், தன் அன்பு பொய்த்து விடாது ஏறு அடக்கி நின்ற அவனுக்கு, உன்னை மணம் செய்து தர நம் தந்தையும் தமையன்மாரும் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/119&oldid=707963" இலிருந்து மீள்விக்கப்பட்டது