பக்கம்:முல்லைக்கொடி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

மோரோடு வந்தாள்

அழகும் இளமையும் ஒருங்கே வாய்ந்த ஆயர் மகள் அவள். காதில் குழை, கழுத்தில் வடம், கூந்தலில் தாய் சூட்டிய கண்ணி; இவற்றால், அவள் அழகு மேலும் சிறந்து விளங்கிற்று. அத்தகையாள், தலையில் மோர்க் கூடை ஏந்திச் சென்று, மாநகர் வீதிகளில் "மோரோ மோர்!’ என விலை கூறி விற்று விட்டு, அதற்கு விலையாகப் பெற்ற நெல், கூடை நிறைய நிறைந்து விடுவதால், மகிழ்ச்சியால் மிகுந்து, கை வீசி நடந்து, வீடு வந்து சேர்வள்; இந்நிகழ்ச்சி நாள்தோறும் நிகழும். .

அவள், தயிர்க் கூடையைத் தலையில் சுமந்து செல்லும்போதும், நெல் நிறைந்த வட்டியோடு வீடு திரும்பும்போதும், ஒவ்வொரு நாளும், அவள் செல்லும் வழியில் இருந்து, அவளைப் பார்த்து, அவள் பேரழகால் அறிவு பிறழ்ந்து வருந்தினான் ஒர் இளைஞன். காதல் நோய் மிக்க அவ்விளைஞனால், தன் காதலை அவளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/135&oldid=707979" இலிருந்து மீள்விக்கப்பட்டது