பக்கம்:முல்லைக்கொடி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இ. புலவர் கா. கோவிந்தன்

தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை ஆம்பல் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக் காஞ்சிக்கீழ்ச் செய்தேம் குறி.”

தலைவனும் தலைவியும் ஆற்றிடை எதிர்ப்பட்டுத் தலைவி அவன் பரத்தமை கண்டு ஊட, அவன் குளுற்றுத் தெளிக்க, அவள் ஊடல் தீர்ந்து குறியிடம் கூறியது.

1. இறுத்தவாய் - தங்கிய இடம்: 5, அகல் - ஆங்கண் ஊர்; அளைமாறி - மோர்விற்று; 7. இகலாட்டி - மாறுபடுபவளே; 8. அஃது மோர் விற்பது; 13, புத்தேள் - கடவுள்; 14. வாய்வாளேன் - வாய் திறவேன்; 18. சொல்லாற்றுகிற்பார் - பேச்சுக் கொடுப்பவர்; 19. சொல்லாதி - சொல்லாதே, 20, தகைத்தனேன் - தடுத்தேன்; 21. மண்டாத - விரும்பாதனவற்றை; 22. கடவர் - கடன்பட்டவர்; 23. படிற்றால்- தன்மையால்; நிற்கொண்டது- நின்பால் கொண்டது.27. தளவம் - செம்முல்லை; ததைந்த - நெருங்கி வளர்ந்த, 29. தளமா - இருப்பிடமாக; 31. புகா - உணவு, உய்த்துக் கொடுப்பதோ - கொண்டு கொடுக்குமோ? 35. தெழி - கடையும் ஒலி, 36. அண்ணணித்து - மிகவும் அண்மைக்கண், 40. துஞ்சுஅன்ன - தூங்கினாற்போல்; அறை - சிறுகுன்று 40. தடிகண் - வெட்டிய நுங்குக்குழி, புரையும் - ஒக்கும்; 48. யா - பசுக்களை; முனியா - வெறுக்காத; 49. கட்குத்தி - பார்த்திருக்கும் பொழுதே கவர்ந்து கொள்பவன்; 53. இணைவனப்பு- இத்தகைய அழகு,58. தேங்கொள் பொருப்பன்- பாண்டியன்:59.வேந்துட்டு அரவம்-வேந்தன் வாழத் தெய்வத்திற்குப் பலியிட்டு வழிபடும் விழா: ஆரவாரம், பயிர் - ஒலித்துக் கூப்பிடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/134&oldid=707978" இலிருந்து மீள்விக்கப்பட்டது