பக்கம்:முல்லைக்கொடி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 131

சேய்த்தன்றி அண்ணணித்து ஊராயின், நண்பகல் போழ்தாயின், கண்நோக்கு ஒழிக்கும் கவின்பெறு பெண்ணிர்மை மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்றுஇன்ன வெயிலொடு எவன் விரைந்து சேறி? உதுக்காண், பிடிதுஞ்சு அன்ன அறைமேல, நுங்கின் 40 தடிகண் புரையும் குறுஞ்சுனை ஆடிப், பணிப்பூந் தளவொடு முல்லை பறித்துத் தனிக்காயாந் தண்பொழில் எம்மொடு வைகிப் பனிப்படச் செல்வாய், நும் ஊர்க்கு.

இனிச்செல்வேம் யாம். #5 மாமருண் டன்ன மழைக்கண் சிற்றாய்த்தியர் நீமருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை அவை; யாமுனியா ஏறுபோல் வைகல் பதின்மரைக் காமுற்றுச் செல்வாய் ஒர் கட்குத்திக் கள்வனை; நீ எவன் செய்தி பிறர்க்கு? 50 யாம் எவன் செய்தும் நினக்கு? கொலை உண்கண், கூர் எயிற்றுக்கொய்தளிர் மேனி இணைவனப்பின் மாயோய்! நின்னிற் சிறந்தார் நிலவுலகத்து இன்மை தெளி நீ; வருதி; மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் 55 தலையினால் தொட்டு உற்றேன் சூள். ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ ஆயின், தேங்கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் வேந்துட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமல் காஞ்சித் தாது உக்கன்ன தாதெரு மன்றத்துத் 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/133&oldid=707977" இலிருந்து மீள்விக்கப்பட்டது