பக்கம்:முல்லைக்கொடி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 135

இன்னாள் போல் உள்ளாள் என எவரோடும் உவமை காட்டிக் கூறலாகா இவள் அழகின் திருவுருவைப் பார்!" எனக் கூறிப் புலம்பிப் பெருமூச்செறிந்தான்்.

'நெஞ்சே! இவள் தாய் அருமையாகப் பறித்து அழகாகச் சூட்டிய கண்ணி, இவள் கூந்தலில் ஒரு புறமே சரிந்து தொங்கும் சீரைப் பார்; கூந்தலில் சூட்டிய மலரையும் தாங்க மாட்டாது தளரும் இவள் இடை யழகைப் பார்; இவள் அழகால் என் உள்ளம் வேகிறது; இவள் என்னை மட்டுமோ வாட்டுகிறாள்? முற்றுந்துறந்த முனிவர்களையும் துன்புறுத்த வல்லதன்றோ இவள் கண்ணழகு ? இவள் கண் ஒன்றோ வருத்துகிறது? இவள் உடலின் ஒவ்வொரு உறுப்பும் என்னை வருத்துகின்றதே! இவள் உடல் உறுப்புகளெல்லாம், வருத்தும் தொழில் மேற்கொண்ட கண்களாக மாறிக் காட்சி அளிக் கின்றனவே!” எனக் காதல் நோய் மிகுந்து கதறுக் கதறிப் புலம்பினான்.

அவன் அவ்வாறு புலம்பிக் கொண்டேயிருந்தான்்; தயிர்க் கூடையோடு போனவள் திரும்பி விட்டாள்; வரும் போது தயிர்க் கூடையோடு, தயிருக்கு விலையாகப் பெற்ற வகை வகையான நெல் நிறைந்த வட்டியொன்றையும் உடன் கொண்டு வந்தாள். தயிர்ப் பானை வெறும்பானை தான்ே என்ற துணிவு; சுமையடையைப் பொருந்த வைக்க வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு இல்லை. இடுப்பில் உள்ள நெல் வட்டியை மட்டும் ஒரு கையால் தழுவிக் கொண்டாள்; மோர் விலையாகி விட்டது; அதுவும் அத்துணை விரைவில்; அவ்வளவு பெருவிலைக்கு என்ற மகிழ்ச்சி, அதனால், கைவீசி நடந்தாள். நடை விரைவால், காதிலும் கழுத்திலும் தொங்கிய மகரக்குழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/137&oldid=707981" இலிருந்து மீள்விக்கப்பட்டது