பக்கம்:முல்லைக்கொடி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இ. புலவர் கா. கோவிந்தன்

ஆடி ஒளிவீசின; குலுங்கக் குலுங்க நடக்கும் நடையால், உருவு சிறுத்து, ஒருவர்க்கும் புலனாகாத இவள் இடை, ஒடிந்து வீழ்வதுபோல் ஆடிக் காட்டிற்று. -

அழகின் திருவுருவம் நடந்து வருவது போல் நடந்து வரும் அவளை இளைஞன் கண்டான். காமவெறி தலைக்கேறி விட்டது; அழகின் பிறப்பிடம் எனப் பாராட்டப் பெறும் திலோத்தமை, ஊர்வசி என்ற தேவ மகளிர் இருவரும், தங்கள் அழகையெல்லாம் இவள்பால் தந்து விட்டனரோ? இவள் இத்துணை அழகாய்க் காட்சியளிக்கின்றனளே! இவள் அழகைக் கண்டு நான் வருந்துவது ஒரு வியப்போ? இவள், பால்மடை ஏந்திக் காமவேள் கோட்டம் புகுந்தால், இணையிலா அழகி இரதிதேவியின் கணவனும், காதற் கடவுளுமான அக் காமவேளும் இவள் அழகால் அறிவிழந்து, தன் கைப்படை அழிய அழுது வருந்துவன். அவனே அவ்வாறாயின், என் நிலை என்னாம்?

"நெஞ்சே! இவள் அழகிதான்்; ஆனால் அவள்பால் அழகிருக்குமளவு அன்பு இல்லை; தன்னைக் கண்டவர் உள்ளத்தில் காதல் நோயை உண்டாக்கத் தெரிந்த இவளுக்கு, அதைப் போக்கி இன்பம் தரத் தெரியவில்லை; தெரியவில்லை என்பதன்று; தான்் தந்த நோயைத் தான்ே போக்க வேண்டும் என்ற நல்ல்ெண்ணம் இல்லை. இவ்வாறு, தன் கண்ணில் படும் ஆடவர்களைத் தன் ஆசைக்கு அடிமையாக்கிக் கொள்ள வல்லவள் இவள் என்பதை அறிந்து கொண்டமையாலன்றோ, இவ்வூர்ப் பெண்கள், ஏடி! பெண்ணே ! நாங்கள் மாங்காய் ஊறுகாய் வைத்து உண்ணக் கற்றுக் கொண்டோம். இனி எங்களுக்கு மோர் வேண்டாம்; இனி மோர்க் கூடையேந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/138&oldid=707982" இலிருந்து மீள்விக்கப்பட்டது