பக்கம்:முல்லைக்கொடி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 137

இங்கு வர வேண்டாம்; அதோ, உன் தாயும் தமரும், உன் தோழியரும் புறப்பட்டு விட்டார்கள். அவர் அருகில் இருப்பதால், ஆடவரை மயக்கும் உன் ஆணவம் அடங்கும். ஆகவே, எழுந்து அவரோடு செல், என்று கூறி இவளை விரட்டுகின்றனர்; விரட்டுவதோடு அமையாது, இவள் மாலையிலும் வரக்கூடும்; ஆகவே, இவள் வருகை அறிந்து இவளை விரட்டுவதினும், தம் கணவர்மார் இவளைக் காணாதிருத்தற் பொருட்டு, அவரை இரவு பகல் எப்பொழுதும் வீட்டிற்குள்ளேயே வைத்து, அவர் வெளியே செல்லாவாறு வாயில் அடைத்துக் காத்துக் கொள்வதே நலமாம், எனத் துணிந்து, அவ்வாறே இவளுக்காக, விருந்தினர்க்கு அடையாத தம் வாயில்களை அடைத்து வாழ்கின்றனர். அத்தகைய கொடிய அழகியன்றோ இவள்!” எனக் காம நோய் மிகுதியால் கலங்கி ஏதேதோ கூறித் துயருற்றுக் கிடந்தான்்.

“கார் ஆரப் பெய்த கடிகொள் வியன்புலத்துப் பேராது சென்று பெரும்பதவப் புல்மாந்தி, நீரார் நிழல குடம்சுட்டு இனத்துள்ளும், போர் ஆரா ஏற்றின் பொருநாகு, இளம்பாண்டில் தேர் ஊரச் செம்மாந்ததுபோல் மதைஇனள், 5 பேரூரும் சிற்றுாரும் கெளவை எடுப்பவள்போல் மோரோடு வந்தாள் தகை கண்டை; யாரோடும் சொல்லியாள் அன்றே வனப்பு!

பண்ணித் தமர் தந்து ஒருபுறம் தைஇய கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல்; 10 புண்நில்லார் புண்ணாக நோக்கும்; முழுமெய்யும் கண்ணளோ, ஆயமகள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/139&oldid=707983" இலிருந்து மீள்விக்கப்பட்டது