பக்கம்:முல்லைக்கொடி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இ. புலவர் கா. கோவிந்தன்

இவள்தான்், திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள்வீசி வரிக்கூழ வட்டி தழிஇ, அரிக்குழை ஆடற்றகையள்; கழுத்தினும் வாலிது! 15 நுண்ணியதாய்த் தோன்றும் நுசுப்பு;

இடைதெரியா ஏளர் இருவரும் தத்தம் உடைவனப்பெல்லாம் இவட்கு ஈத்தார் கொல்லோ? படையிடுவான்மன்கண்டீர் காமன், மடையடும் பாலொடு கோட்டம் புகின். 20

இவள்தான்், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால்,

மருந்தல்லள்: யார்க்கும் அணங்காதல் சான்றாள் என்று ஊர்ப்பெண்டிர், மாங்காய் நறுங்காடி கூட்டுவேம்; யாங்கும் எழுநின் கிளையோடும் போகென்று தத்தம் கொழுநரைப் போகாமல் காத்து முழுநாளும் 25 வாயில் அடைப்ப வரும்." -

காமம் - சாலா இளமையுடையாள் ஒரு தலைவியை - ஒரு தலைவன் காதலித்துத் தீராக் காதல் நோயுற்றுத் தான்ே வருந்திக் கூறியது இது.

1. கார்- மழை, ஆர-நிறைய, கடிகொள்- காவல் அமைந்த, 2. பேராது - நெடிது நின்று, சென்று பேராது என மாற்றுக. 4. போர் ஆரா - போர் வெறிமிக்க, பொருநாகு - உவமித்துக் கூறவல்ல பசு, பாண்டில் - வண்டி, 6. கெளவை - ஆரவாரம், 7. தகை - அழகு, 8. சொல்லியாள் - உவமித்துக் கூறத்தகாதவள். 11. புண் நில்லார் - பாவம் தரும் செயல் புரியாத துறவிகள். 14. வரிக்கூழ - வகைவகையான நெல்லைஉடைய, வட்டி-கூடை 15. வாலிது- ஒளி வீசவல்லது. 17. ஏனர் - அழகு 20. கோட்டம் - கோயில். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/140&oldid=707984" இலிருந்து மீள்விக்கப்பட்டது