பக்கம்:முல்லைக்கொடி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

ஏடா! எமர் காண்பர்!

நாற்புறமும் வேலி சூழ்ந்து நல்ல காப்பமைந்த பெரிய ஆயர்பாடியில், நல்லினத்து ஆயரும், புல்லினத்து ஆயரும், கோட்டினத்து ஆயரும் கலந்து வாழ்ந்திருந்தனர். அவருள் ஆட்டிடையர் குடியில் பிறந்த ஒரு பெண்ணை, மாட்டிடையர் குடியில் பிறந்த ஓர் இளைஞன் காதலித்தான்்; ஒரு நாள் அவளை ஊர் மன்றில் கண்டு தன் காதலைக் கூறினான். காதல் இன்றேல் சாதலே தன் துணிவு எனத் தெளிவாக எடுத்துக் காட்டினான். அவன் பிறந்த குடி பசு வளமும், பால் வளமும் மிக்க பெரிய குடி என்பதையும், அவன் அறிவும் ஆண்மையும் அழகும் வாய்ந்தவன் என்பதையும் அறிந்து, அவளும் அவனைக் காதலித்தாள். ஆனால், அவன் காட்டும் அவசரம் அவளுக்குப் பிடிக்கவில்லை. இருவரின் எதிர்கால வாழ்வை வகுக்கும் அந்நிகழ்ச்சியில், அமைதியும், ஆழ்ந்த ஆராய்ச்சியும் தேவை என அவள் எண்ணினாள். அதனால், அவனைக் காதலித்தவள், அதைக் காட்டிக்

به

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/141&oldid=707985" இலிருந்து மீள்விக்கப்பட்டது