பக்கம்:முல்லைக்கொடி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ↔ புலவர் கா. கோவிந்தன்

கொள்ளாது, அவனுக்கு எதுவும் விடை கூறாது, அவ்விடம் விட்டு அகன்றாள்.

இளைஞன் மிகவும் வருந்தினான்; அவன் சிந்தனை அவனையே சுற்றிச் சுற்றி வந்தது. அவளை விட்டுச் சிறிது பொழுது பிரிந்து வாழ்வதும் அவனால் இயலாது போயிற்று. அவள் காதல் கிட்டாது போயின், தன் வாழ்வு பயனற்றுப் போய்விடும் என அஞ்சினான். அந்நிலையில், மீண்டும் ஒரு நாள், அவளை ஊர் மன்றில் கண்டான்; மோரும் வெண்ணெயும் விற்கும் பணி மேற்கொண் டிருந்தாள் அவள். அவளை ஆங்குக் கண்டதும், காதல் கட்டறுத்துக் கொண்டு ஓடவே, அவன் அவளை ஆரத் தழுவிக் கொண்டான்.

மோரோ மோர்! நெய்யோ நெய்! என விலை கூறி விற்றுச் சென்றவள், ஒர் இளைஞன் தன்னைத் திடுமெனத் தழுவிக் கொண்டமையால் நடுங்கிவிட்டாள்; இளைஞன் யார் என்பதை அறிந்ததும், நடுக்கம் நீங்கி, அவன் செயல் கண்டு நகைத்தாள். கட்டித் தழுவிக் கொண்டதைத் தடுக்காது, நகைத்து நிற்பதைக் காணவே, அவள் தன் காதலுக்கு இசைந்து விட்டாள் எனத் துணிந்தான்் இளைஞன், கூட்டத்தை விரும்பிற்று அவன் உள்ளம்; அதை அவளுக்கு மெல்ல அறிவித்தான்்.

அது கேட்டாள். அவள், "ஏடா! உன் காதலென்ன தேள்கடி மருந்தோ: மருந்திட்டவுடனே நோய் தீர்ந்து விடுதல் போல், உன் உள்ளத்தில் காதல் வேட்கை தோன்றியதும், கூடித் தீர்ந்துவிட விரும்புகின்றனையே! அவ்வளவு அவசரம் காதல் நிகழ்ச்சியில் கூடாது. மேலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/142&oldid=707986" இலிருந்து மீள்விக்கப்பட்டது