பக்கம்:முல்லைக்கொடி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 141

நான் உன்னைக் காதலிக்கிறேன், உன்பால் எனக்கு அன்பு இருக்கிறது என்று யார் கூறினார்கள்? காதலால் கருத்திழந் திருக்கும் உன்நிலை கண்டேன்; ஒரு விளையாட்டு விளை யாட எண்ணினேன்; அதனால், நீ அணைத்துக் கொள்ள இடங்கொடுத்துக் கடிந்து கொள்ளாது விட்டேன்; அதைக் கொண்டு, ஏடா! கூட்டத்திற்கே துணிந்து விட்டாயே! ஏடா! ஒன்று பார்; ஒருத்தர் யாரேனும் மோர் ஆசைப் பட்டால் மோர் விற்பவள், அவருக்குச் சிறிது மோர் வார்ப்பதால் தன் பொருளுக்குப் பெருங்கேடு வந்து விடாது என அறிந்து வார்ப்பாள். ஆனால், மோர் குடித்து மகிழ்ந்த அவர், 'இவள் ஓர் ஏமாளி; வெண்ணெய் வேண்டி னாலும் விரும்பித் தருவள்! என்று எண்ணி, வெண்ணெய் தருமாறு அவளைக் கேட்பரோ? அவர்தான்் கேட்டாலும், அரிய மதிப்பு வாய்ந்த, விலையாகப் பெரும் பொருள் தரவல்ல வெண்ணெயை அவள் தருவளோ? தராள்; அது போலப், பெரியதோர் இழுக்கு இல்லை என்ற உணர்வால் அணைக்க உடன்பட்ட நான், கூட்டத்திற்கு இசைவேன் என எண்ணாதே" எனக் கூறி அகன்று நின்றாள்.

அவள் அது கூறவே, அவன் உள்ளமும் உடலும் குன்றின; அயர்ந்து விட்டான் அவன். "பெண்ணே ! உன் கருத்து அதுவாயின், நன்று. நீ போ. நான் என்ன செய்வேன்? என் வாழ்வின் முடிவு அது!’ எனக் கூறித் தளர்ந்தான்். - - .

சிறிது நாழிகைக்கெல்லாம், அடங்கியிருந்த அவன் காதல் கட்டவிழ்த்துக் கொண்டு பெருகிற்று. அதனால், அவளை மீண்டும் நெருங்கி, "பெண்ணே ! ஆயர் மகளிர், தயிரை மத்திட்டுக் கடையுங்கால், அம்மத்தில் சுற்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/143&oldid=707987" இலிருந்து மீள்விக்கப்பட்டது