பக்கம்:முல்லைக்கொடி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 : புலவர் கா. கோவிந்தன்

பெற்ற கயிறு, மத்தை விட்டு அகலாது, அதையே சுற்றிச் சுற்றி வருவதுபோல், உன் நலன் பெறும் விருப்பத்தால் உன்னையே சுற்றிச் சுற்றி வரும் என் நெஞ்சு, உன் கடுஞ் சொல் கேட்டதும் அஞ்சி என்பால் ஓடிவந்து விடுகிறது. சிறிது பொழுதிற்கெல்லாம் நின் நினைவு எழவே, மீண்டும் உன்பால் வந்து உன்னை வளைய வளைய வருகிறது. இவ்வாறு, நாள்தோறும் ஒரு நிலையில் நில்லாது தடுமாறுகிறது. அது. யான் என் செய்வேன்?

"பெண்ணே இரவில் தாயருகிற் கிடந்து உறங்கிய கன்றைப், பகலில், அத்தாய்ப் பசுவின் கண்ணிற்படும் அண்மையில் அமைந்துள்ள தொழுவினுள் விட்டு வைக்கின்றனர் ஆயர். தன் கன்றினுக்கு இன்னல் நேர, இது இரவு அன்று; மேலும் அது தான்் காணமாட்டாத் தொலைவிலும் சென்று விடவில்லை என எண்ணி, அமைந்திராது, அத் தாய்ப் பசு, தன் கன்றை அடையத் தொழுவைச் சுற்றிச் சுற்றி வருவதுபோல், என் நெஞ்சு, நீ என்னால் எளிதில் மணந்து கொள்ளத் தக்கவள் என்பதை யும், இவ்விடம், பலரும் வழங்கும் மன்றம் என்பதையும், காலம், காதல் விளையாட்டைப் பிறர் கண்டு நகைக்கத் தக்க பகற் காலம் என்பதையும் உணர்ந்திருந்தும், தான்் கொண்ட காதல் நோய் மிகுதியால் உன்னையே சுற்றிச் சுற்றி வருகிறது. 1.

"பெண்ணே! மருந்திட்டு வெண்ணெய் எடுத்து விட்ட பச்சைப் பால் காய்ச்சிப் பிரை குத்தினால், இறுகித் தயிராகுமாயினும், அது தன் சுவையிழந்து போதல் போல், என் உயிரும் காதற் பயனை இழந்து விட்டமையால், யாதொரு பயனுமில்லாத நடைபிணமாகி விட்டது; செய்வது அறியாது தளர்கிறது. அது!" என்று, எதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/144&oldid=707988" இலிருந்து மீள்விக்கப்பட்டது