பக்கம்:முல்லைக்கொடி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 143

எதையோ கூறித் தன் உள்ளத் துயரை அவளுக்கு உணர்த்தினான். - -

அவன் காதல் உறுதி வாய்ந்தது என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். அதனால் அவனுக்கு இசைத்து, 'ஏடா! அன்று, என்னை ஊர் மன்றத்தில் கண்டு உரையாடிய பொழுது, உயர்குடிச் சான்றோர் பெற்ற பெருமகளே! உன் காதல் இன்றேல் என் உயிர் வாழாது: என்பன போலும் அன்பு மொழிகள் பலப்பல கூறினாய். அவற்றின் உண்மையை அன்று அறிந்திலேன்; இன்று அறிந்து கொண்டேன். ஆயினும், ஈண்டு இனியும் இவ்வாறே நின்று பேசிக் கொண்டிருந்தால், என் பெற்றோர் என்னைத் தேடிக் கொண்டு வந்து விடுவர்; அவர்கள் உன்னைப் பார்த்து விடுவர்; அதனால் நம் காதலுக்குக் கேடாம். இன்றேபோல் நாளையும் வருவேன்; நாளைக்கு மோர் விற்கச் செல்லாது, கன்று மேய்க்கும் கருத்துடையவள் போல், எம் விளைபுலத்திற்கு வருவேன்; ஆங்கு வருக இன்று. இனியும் தில்லாது நீங்கிவிடுக!” எனக் கூறி அனுப்பிவிட்டுத் தன் வீடு வந்து சேர்ந்தாள்.

"கடிகொள் இருங்காப்பில் புல்லினத்து ஆயர் குடிதொறும் நல்லாரை வேண்டுதி, எல்லா! இடுதேள் மருந்தோ நின்வேட்கை? தொடுதரத், துன்னித் தந்தாங்கே நகைகுறித்து, எம்மைத் திளைத்தற்கு எளியமாக் கண்டை; அளைக்கு எளியாள் 5

வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய் '.

- . . . . . ஒண்ணுதால் ஆங்குநீகூறின் அனைத்தாக நீங்குக. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/145&oldid=707989" இலிருந்து மீள்விக்கப்பட்டது