பக்கம்:முல்லைக்கொடி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இ. புலவர் கா. கோவிந்தன்

அச்சத்தால் மாறி அசைவினால் போத்தந்து நிச்சம் தடுமாறும் மெல்லியல் ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறுபோல் நின்நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு.

விடிந்தபொழுதிலும் இல்வயின் போகாது கொடுந்தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடுஞ்சூல் ஆநாகுபோல் நிற்கண்டு, நாளும் நடுங்கு அஞர் உற்றது என்நெஞ்சு. 15

எவ்வம் மிகுதர, எந்திறத்து எஞ்ஞான்றும் நெய்கடை பாலின் பயன் யாதும் இன்றாகிக் கைதோயல் மாத்திரை யல்லது செய்தி அறியாது; அளித்து என் உயிர்.

அன்னையோ, - 20 மன்றத்துக் கண்டாங்கே, சான்றோர் மகளிரை இன்றியமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் நின்றாய்நீ, சென்றி எமர் காண்பர்; நாளையும் கன்றோடு சேறும் புலத்து.”

தலைவன் தலைவிக்குத் தன் ஆற்றாமை கூற, அவன் கூட்டத்திற்கு இசைந்து குறியிடம் கூறியது. இது.

1. கடி-காவல், இரு-பெரிய,5. திளைத்தல்- கூடிமகிழ்தல், அளை - மோர் 13. கொடுந்தொழுவு - வளைத்துக் கட்டப்பெற்ற தொழுவு, 14. கடுஞ்சூல் - முதற்குல்; ஆநாகு - பசு, 15. அஞர் - துன்பம் 16. எவ்வம் - நோய், 18. செய்தி அறியாது - செய்வது அறியாது 20 அன்னை - அத்தன்மையுடையை 22 சொல்லுவாய் நின்றாய் - சொல்லி நின்றாய், 23. சென்றி - செல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/146&oldid=707990" இலிருந்து மீள்விக்கப்பட்டது