பக்கம்:முல்லைக்கொடி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஒ. புலவர் கா. கோவிந்தன்

அத்தகையாள் ஒரு நாள் காலையில் எழுந்தாள். தந்தையும் தமையன்மாரும் கறந்து தந்த பாற் குடங்களை, அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் கொண்டு சென்று வைத்தாள். புல் மேய்க்க ஒட்டிச் செல்லும் ஆனிரை களோடு ஓடிவிடாவாறு, அவற்றின் கன்றுகளைத் தாம்பு களில் தனித்தனியே பிணித்து, அத் தாம்புகளைத் தன் மனையில் வரிசையாக நிற்கும் கம்பங்களில் கட்டினாள். தன் கடன் முடிந்ததும், தாயிடம் சென்றாள். தாய் அவள் தலையை வாரிப் பூச் சூட்டி விட்டாள்; தாய் அளித்த, பூத்தொழில் அமைந்த கரையும் நீலவண்ண உடலும் கொண்ட உயர்ந்த ஆடையை அழகாக அணிந்து கொண் டாள். தன் வீட்டிற்கு அணித்ததாக இருந்த தோட்டத்திற்கு ஓடினாள். பாங்கர், முல்லை முதலாம் கொடிகள் படர்ந்து, மணம் வீசும் ஆங்கு, ஆட்டிடையர் மகளிரும், மாட்டிடையர் மகளிரும், கோட்டினத்து ஆயர் மகளிரும் கூடி, மணல் வீடு கட்டி மகிழ்ந்தாடக் கண்டாள். அவர் களோடு கலந்து கொண்டு, தான்ும் ஆடத் தொடங்கினாள்.

சிறிது நேரம் கழிந்தது. இளைஞன் ஒருவன் ஆங்கு வந்தான்். அம் மகளிரைப் போலவே, அவனும் ஓர் ஆயர் மகன்; குருந்தம்பூ மலர் கொண்டு கட்டிய மணமிக்க மாலையைத் தன் தலையில் சூடிக் கொண்டு வந்த அவன், அவள் கட்டும் மணல் வீட்டிற்கு அருகே நின்றான். அவளை அவன் முன்னரே அறிவான்; அது மட்டுமன்று; அவள் மீது அவனுக்குக் காதலும் உண்டு. அவளைக் காணும் ஆர்வ மிகுதியினாலே, அவன் அந்நேரத்தில் பூங்கு வந்தான்். வந்தவன், அவள் அருகில் இருந்தவாறே, அவள் அணிகளின் சிறப்பு, அவ்வணிகள் அவளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/148&oldid=707992" இலிருந்து மீள்விக்கப்பட்டது