பக்கம்:முல்லைக்கொடி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 147

அளிக்கும் அழகின் பெருமை, இப்புற அழகுகளை வெல்லும் அவள் அக அழகு ஆகியவற்றைக் கண்டான். அவள் தன்னால் மணந்து கொள்ளத் தக்க நல்லவளாதல் அறிந்து மகிழ்ந்தான்். மகிழ்ச்சி மிகுதியால் தன்னை மறந்தான்்; அவன் வாய், அவனை அறியாமலே, அவள் நலங்களை வாய் விட்டுக் கூறிப் பாராட்டிற்று.

குனிந்து மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தவள், குரல் கேட்டுத் தலை நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவனை அவளும் அறிவாள்; அவனைப் போலவே, அவளுக்கும் அவன் மீது காதல் உண்டு. இருவரும் அதற்கு முன்னரே பலமுறை கண்டு பழகியுள்ளனர். ஆனால், அன்று அவனைக் கண்டதும் அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கவில்லை. மாறாக, அவள் மனம் அவனை மிகவும் வெறுத்தது. தன்னைக் கண்டு, தன் மீது காதல் கொண்டு பலநாள் பழகிய பினனரும், விரைந்து வந்து வரைந்து கொண்டிலனே என்ற வருத்தம் அவளுக்கு. அதனால் வரைவிற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளாது, வறிதே வாளா வந்து நிற்கும் அவனைக் கண்டும், காணதவள் போல், தன் கருத்தை மணல் வீடு கட்டுவதில் போக்கினாள். -

ஆனால், அவ்விளைஞன், காதலியின் வெறுத்த நோக்குண்டு கலங்கவில்லை; மாறாகத் தன் சொல்லாற்ற லால் அவள் சினத்தைப் போக்கி விடலாம் எனத் துணிந்தான்். அத் துணிவோடு அவளை நெருங்கினான்; "பெண்ணே! மணல் வீடு கட்டும் உன்னோடு யானும் ஒத்துழைக்கலாமோ? உனக்குத் துணையாய் யானும் சிறிது கட்டித் தரலாமோ?” எனக் கேட்டுக் கொண்டே, அவள் அருகில் அமர்ந்தான்். அவன் செயலைக் கண்டு சினந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/149&oldid=707993" இலிருந்து மீள்விக்கப்பட்டது