பக்கம்:முல்லைக்கொடி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 : புலவர் கா. கோவிந்தன்

எழுந்தவள், "ஏடா! தாய் தந்தையர் உழைப்பால் உருவான வீட்டில், வறிதே கிடந்து மகிழத் தெரிவதல்லது, நமக்கு என ஒரு வீடு வேண்டும். அவ்வீட்டில் நமக்கென ஒரு வாழ்வு வேண்டும் என எண்ணி, உனக்கு என ஒரு வீடு அமைத்துக் கொள்ளும் உணர்வு உனக்கு என்றுமே உண்டாகாதோ? எனக் கடிந்துரைத்து விட்டுத் தன் காரியத்தை மேற்கொண்டாள்.

குனிந்திருக்கும் அவள் கூந்தலைக் கண்டான்; அக்கூந்தலில், அவள் தாய் அழகாகச் சீவி முடித்துச் சூட்டி வைத்திருக்கும் மணமும், மகரந்தமும் சொரியும் மலர் மாலையைக் கண்டு மகிழ்ந்தான்். மகிழ்ச்சியால் மயங்கி, அவளை மேலும் நெருங்கிப், "பெண்ணே ! கூந்தல் மலர் சரிந்துள்ளது; சரிந்ததைச் சிறிதே சீர்படுத்தலாமோ?” எனக் கேட்டவாறே, கூந்தலைக் கையாற் பற்றத் தலைப்பட்டான். அவன் அன்பு மொழி கேட்டும் அவள் சினம் தணிந்திலது. அவன் கைப்பட விருந்த கூந்தலை விரைந்து ஈர்த்துக் கொண்டாள். "ஏடா! ஊரும் உறவும் அறிய மணந்து கொண்டு மனைவி என்ற உரிமையோடு மலர் சூட்ட உனக்கு மனம் இல்லை; தாய் பறித்துக் கொணர்ந்த மலரை மிகவும் உரிமையோடு சூட்ட வந்து விட்டனை! என் கூந்தலைத் தொடும் உரிமை உனக்கு இல்லை; எட்டி நில்!” எனக் கூறிச் சினந்தாள்.

எதிர்நின்று தன்னைச் சினந்துரைக்கும் அவள் நிலை கண்டான்; அவள் சினத்தைப் போக்கி விடலாம் என்ற நம்பிக்கை அவன் உள்ளத்தை விட்டு அப்பொழுதும் அகலவில்லை. அவள் மார்பைப் பார்த்தான்்; அம்மார்பில், அவள் தாய், தொய்யில் குழம்பால் தீட்டிய ஒவியங்கள், ஆங்காங்கே அழிந்து போக, ஆங்கெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/150&oldid=707994" இலிருந்து மீள்விக்கப்பட்டது