பக்கம்:முல்லைக்கொடி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 149

பொன்னிறத் தேமல்கள் புறத்தே தோன்றக் கண்டான்;"பெண்ணே! அழிந்த அத்தொய்யிலை எழுதிச் செம்மை செய்யின், உன் சினம் மாறுமோ?” எனப் பணிந்த சொற்களால் வினவினான்.

தாய் எழுதும் தொய்யிலினும், தம் கணவன்மார் எழுதும் தொய்யிலையே மகளிர் பெரிதும் விரும்புவர். தாம் விரும்பும் மகளிர் மார்பில் தொய்யில் வரையும் உரிமை, ஆடவர்க்கு, அம்மகளிரை மணந்து கொண்ட பின்னரே உண்டாம். அந்த உரிமையை அவன் இன்னமும் அடையவில்லை. அதனால், அவனால் தொய்யில் எழுதப் பெற்று மகிழும் பேறு அவளுக்கும் வாய்க்கவில்லை. தாய் முன் அமர்ந்து தொய்யில் எழுதிக் கொள்ளும் போதெல்லாம் அதை எண்ணி எண்ணி வருந்தினாள் அப்பெண். தொய்யிலைச் செம்மை செய்யவோ, என அவன் கேட்டதும், அவ்வருத்தம் மிகுந்தது. அதனால் கடுஞ்சினம் கொண்டாள். "ஏடா! வரைந்து கொண்டு விரும்பியவாறெல்லாம் தொய்யில் எழுதும் விருப்பம் உனக்கில்லை. தாய் எழுதியதில், அழிந்த சிலவற்றை எவரேனும் கண்டு கொள்வரோ எனும் அச்சத்தால், அவசர அவசரமாகச் செம்மை செய்வதில் மகிழ்ச்சி காணுகிறது உன் உள்ளம். ஆனால், என் தோளிலும் மார்பிலும் தொய்யில் எழுதத் தாயின் துணையையும், சீர் அழிந்ததைச் செம்மை செய்ய உன் துணையையும் நாடி நிற்கும் நிலையில், இனியும் உயிர் வாழ்ந்திலேன்; இந்நிலை நெடிது நில்லாது!” எனக் கூறி மறுத்து விட்டாள். இவ்வாறே, அவன் ஆசை ஒவ்வொன்றையும் மறுத்து அழித்தாள்; தன்னை எதிர்த்துப் பேசித் த்ன் ஆசையை நிறைவேற வொட்டாது ஆக்கிய அவள் செயலால் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/151&oldid=707995" இலிருந்து மீள்விக்கப்பட்டது