பக்கம்:முல்லைக்கொடி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 * புலவர் கா. கோவிந்தன்

உள்ளம் குன்றிற்று; உள்ளமும் உடலும் நான, அவன் அவ்விடம் விட்டு அகன்றான்.

அவன் செல்வதைக் கண்டாள் அப்பெண்; விரைந்து வந்து வரைந்து கொண்டிலனே எனும் ஏக்கத்தால், அவள் அவ்வாறு நடந்து கொண்டாளாயினும், வருந்திச் செல்லும் அவனைக் கண்டு அவளும் வருந்தினாள். "வருந்திச் செல்லும் அவன் வருத்தத்தை உடனே போக்கு தல் வேண்டும்; இன்றேல் வருத்த மிகுதியால், அவன் உயிர்விடவும் துணிவன்; அந் நிலையை என்னால் தாங்கிக் கொள்வது இயலாதே!” என எண்ணி வருந்தினாள். ஆனால், வருந்திச் சென்றவனை மீண்டும் அழைத்து அவன் வருத்தத்தைப் போக்குவது அவளால் இயலாது, வருந்தும் அவன் நிலைகண்டு வருந்தும் தன் உள்ளத் துயர் தாங்கி உயிர் வாழ்தலும் இனி இயலாது; அவன் துயரும் அவள் துயரும் ஒருங்கே அழிதல் வேண்டும். அதற்கு இருவரும் மணந்து கொள்ளுதல் வேண்டும். ஆனால், திருமண முயற்சி மேற்கொள்வது அவளால் இயலாது; ஒன்று, அவன் மணம் பேசி வந்து மணந்து கொள்ளுதல் வேண்டும்; அல்லது, அவளை அவள் பெற்றோர், தாமே முயன்று, அவனுக்கு மணம் செய்து கொடுத்தல் வேண்டும். இதை அவ்விரு திறத்தார்க்கும் அறிவிப்பதும் அவளால் இயலாது; ஆனால் வாய்மூடி வாளா கிடக்கவும் அவளால் முடியவில்லை. அதனால் அதற்கு வழி யாது என எண்ணிப் பார்த்தாள். இந்நிலையில் தனக்கு உற்ற துணை புரிவாள் தன் உயிர்த் தோழி ஒருத்தியே என உணர்ந்தாள்; உடனே அவளை அழைத்தாள்; அவள் வந்ததும், தன் காதலை அறிவித்தாள்; அன்று அவன் வந்தது, அவனுக்கும் தனக்கும் இடையே நடைபெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/152&oldid=707996" இலிருந்து மீள்விக்கப்பட்டது