பக்கம்:முல்லைக்கொடி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 151

உரையாடல், அவன் துயர், அதனால் ஆகக்கூடிய விளைவு கண்டு தான்் கொள்ளும் அச்சம் ஆகிய அனைத்தையும் கூறித், "தோழி! அவன்பால் சென்று, ஏறு தழுவி மணக்கும் ஆயர் மணமுறையை அவனுக்கு அறிவித்து, வரைந்து கொள்ள வருமாறு அவனை வேண்டிக் கொள்வதோ, அல்லது, என் காதலைத் தாய்க்கும் தந்தைக்கும் அறிவித்து, என்னை அவனுக்கு மணம் செய்து தருமாறு அவரை வேண்டிக் கொள்வதோ, இன்றே, இப்பொழுதே மேற்கொள்ள வேண்டுவது உன் கடன்; அதனால், அவன் நோயும் தணியும்; என் நோயும் தணியும்; இருவரைப் பற்றி வருத்திய பெருநோய் போக்கிய புண்ணியம் உனக்கும் உண்டாம்; ஆகவே, தோழி! இன்றே புறப்பட்டுப் போ!' என அவளுக்கு அன்புக் கட்டளை இட்டாள். தீம்பால் கறந்த கலம் மாற்றிக், கன்றெல்லாம் தாம்பில் பிணித்து மனைநிறீஇ, தாய் தந்த பூங்கரை நீலம் புடைதாழமெய் அசைஇப், பாங்கரும் முல்லையும்தாய பாட்டங்கால், தோழி! நம்

புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம் 5 ஒருங்குவிளையாட, அவ்வழிவந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை 'முற்றிழை, ஏனர், மடநல்லாய் ! நீஆடும் சிற்றில் புனைகோ சிறிது? என்றான்; 'எல்லா! நீ

பெற்றேம் யாம் என்று பிறர் செய்தஇல் இருப்பாய்; 10 கற்றது.இலை மன்ற காண்' என்றேன்; முற்றிழாய்! தாதுசூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கு? என்றான்; எல்லா! நீ ஏதிலார் தந்த பூக்கொள்வாய், நனிமிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/153&oldid=707997" இலிருந்து மீள்விக்கப்பட்டது