பக்கம்:முல்லைக்கொடி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ஆ. புலவர் கா. கோவிந்தன்

பேதையை, மன்ற பெரிது!’ என்றேன்; மாதராய்! 15 ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென்முலை மேல் தொய்யில் எழுதுகோ மற்று? என்றான். யாம்பிறர் செய்புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது மையலை மாதோ! விடுகு என்றேன்; தையலாய்! சொல்லியவாறெல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப, 20 அல்லாந்தான்் போலப் பெயர்ந்தான்்; அவனை நீ ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும் யாயும் அறிய உரைத்தியின், யான் உற்ற நோயுங் களைகுவை மன்."

தலைவி, ஆடும் இடத்தில் தலைவனைக் கண்டதை யும், ஆங்கு அவனோடு நடாத்திய சொல்லாடலையும் தோழிக்குக் கூறித், தலைவனை வரைவு கடாவி, யாய்க்கு அறத்தோடு நிற்பாயாக என அவளை வேண்டிக் கொண்டது.

3. பாங்கர் - ஒரு கொடி, 4. பாட்டம் - தோட்டம். பாட்டங்கால் - தோட்டத்தில், 7. பொதுவன் - ஆயன், 8. முற்றிழை - சூடிய அணி களை உடையாய், ஏஎர் - அழகு 11. கற்றது இலை - தனக்கென ஒன்றிருக்க வேண்டும் என அறியவில்லை, 12. தகை - அழகு, தைஇய - சூடிய, 16 ஐய வியக்குமாறு, பிதிர்ந்த - ஆங்காங்கே தோன்றும், சுணங்கு- தேமல், 17. பிறர் - ஈண்டு, தாய்.18. செய்புறம் - கோலம் செய்தல், இருந்துமோ - உயிர் வாழ்வேமோ, 19. மையலை - அறிவு மயக்கம் உற்றனை 20. பெயர்ப்ப - மறுக்க 21. அல்லாந்தான்் - ஏமாந்து வருந்தினான், பெயர்ந்தான்் - மீண்டு போயினான், 23. உரைத்தியின் - உரைப்பாயாயின். 24. யான் உற்ற நோயும் என்ற உம்மையால் அவன் உற்ற நோயும் என்பது பெறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/154&oldid=707998" இலிருந்து மீள்விக்கப்பட்டது