பக்கம்:முல்லைக்கொடி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

சொல்லலோம்பு என்றார்!

ஆயர் குலத் தொழிலைப் பிறர் கற்றுத் தர வேண்டாது, இயல்பாகவே அறிந்திருந்த அக்குல இளைஞன் ஒருவன், ஒருநாள், கன்றுகளை மேயவிட்டுக் காவல் மேற்கொண்டிருந்த ஆயர் குலக் கன்னி யொருத்தியைக் கண்டான். அவள் அழகிற்கு அடிமையாகி அவளைக் காதலித்தான்்; அவள் காதலைப் பெற விரும்பினான். அரிய பொருள் ஒன்றை அளித்து அவளை அடையத் துணிந்தான்். மகளிர்க்கு இயல்பாகவே மலர்மீது ஆசை அதிகம்; அதிலும் எளிதில் கிடைக்காத மலரில் மட்டில்லா மகிழ்ச்சி காண்பர். இதை அறிந்த இளைஞன், தன் நிலத்தை அடுத்திருந்த மருத நிலத்திற்குச் சென்று, ஆங்குள்ள நீர்நிலைகளில் மலர்ந்து, காற்று ஆட்ட ஆடி மணம் வீசிக் கொண்டிருக்கும் அழகிய தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத் தான்். தான்் பார்த்தறியாத அப்புது மலரைக் கண்டு அவள் மகிழ்ச்சி கொண்டாள். ஆர்வத்தோடு வாங்கித் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/155&oldid=707999" இலிருந்து மீள்விக்கப்பட்டது