பக்கம்:முல்லைக்கொடி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இ. புலவர் கா. கோவிந்தன்

கூந்தலில் சூட்டிக் கொண்டாள்; அரிய பொருள் அளித்த அவன்மீது அன்பு கொண்டாள். அன்றைய தொடர்பு அம்மட்டோடு நின்றது.

மாலை வரவே, அவள் கன்றுகளை ஒட்டிக் கொண்டு தன் மனைக்குச் சென்றாள்; ஆங்கு மகள் கூந்தலில் தாமரை மலரைக் கண்டாள் தாய்; தாமரை தங்கள் மண்ணில் மலராது; தண்ணிர் வளமிக்க மருத நிலத்து மண்ணிலேயே அது மலரும். மருத நிலத்திற்குள் மகள் சென்றிருக்க மாட்டாள்; ஆங்குச் சென்று அதைப் பறித்துக் கொணரும் துணிவு தோழிப் பெண்களுக்கும் இராது. ஆகவே, இதை இவளுக்கு யாரோ ஒர் இளைஞனே கொண்டு வந்து கொடுத்திருத்தல் வேண்டும் என உணர்ந்தாள். அதனால், மகளை அழைத்து, "மகளே ! மலர் தந்த அந்த இளைஞனோடு இனிப் பேசாதே!” என எச்சரித்தாள்.

அன்போடு அவன் மலர் அளித்தான்்; அரிய மலர் அளித்த அவனோடு பேசாதே என்கிறாள் தாய்; ஏன் இம் முரண்? அவனுந்தான்், ஏதும் தொடர்பில்லாத எனக்கு, அரும்பாடு பட்டு மலர் பறித்துத் தருவானேன் எனச் சிந்தித்தாள்; அது, அவன், தன்பால் கொண்ட காதலின் விளைவு என்பதை அறிந்து கொண்டாள். அதனால், அவள் உள்ளத்திலும் காதலுணர்வு அரும்பிட்டது; அந்நிலையே, அவனைக் காண வேண்டும்; கண்டு, பேசி மகிழ வேண்டும் எனத் துடித்தாள். தாயின் தடையுத்தரவை மறந்தாள்; அவனைக் காணும் ஆர்வ மிகுதியால், இளம் கன்றுகளை ஒட்டிச் செல்லக் கூடாத கடும் வெய்யில் காய்வதையும் பொருட்படுத்தாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/156&oldid=708000" இலிருந்து மீள்விக்கப்பட்டது