பக்கம்:முல்லைக்கொடி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ன் 155

நண்பகற் பொழுதிலேயே புறப்பட்டாள்; நேற்று அவனைக் கண்ட இடத்தில், அவன் தனக்காகக் காத்திருப்பான் என்ற நம்பிக்கையால் ஆங்குச் சென்றாள். அந்நம்பிக்கை வீண் போகவில்லை; அவள் மீது கொண்ட காதலால், அவனும் அவளைப் போலவே, அவள் வருவாள் எனும் 56೨ಹಣ,ಹಲ।Tಿಕ್ಕಿ ஆங்கு வந்து, அவள் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கிடந்தான்்.

அவளும் வந்தாள்; வந்தவள் வேண்டுமென்றே அவனைப் பாராதவள்போல, அவனைக் கடந்து சென்றாள். அதைக் கண்ட அவன் உடனே விரைந்து எழுந்து, அவள் முன் சென்று நின்று அவளை வழிமறித்து நிறுத்தினான். உடனே அவள், "என்னை வழிமறித்து நிறுத்தியவன் யாவன்' என வினவியவாறே, திரும்பி அவனை நோக்கினாள். “g-f! அன்று நடந்த நிகழ்ச்சியை என் பெற்றோர் அறிந்து கொண்டனர். ஏடி! மகளே! தன் குலத் தொழிலைக் கல்லாது, உனக்குத் தாமரை மலர் பறித்து அளித்த அந்த இளைஞனோடு பேசாதே! பேசினும், உன்னை அவன் ஏமாற்றி விடாவாறு விழிப்பாயிரு' என்று என் தாய் எனக்குத் தடை விதித்து விட்டாள். ஆகவே, ஏடா! இனி என் முன் நில்லாதே; சென்றுவிடு!" என்றாள்.

அன்று அவள் அழகு, முன்னாளினும் பன் மடங்கு மிக்குத் தோன்றிற்று. கருநீல மலர்போல், மைதீட்டிய இரு கருவிழிகளும், தொய்யிற் கரும்பு எழுதிய தோள்களும் அவன் காதல் நோயை அதிகப் படுத்தின. அதனால், காமவெறி பிடித்துவிட்ட அவன், பெற்றோர் உன்னோடு பேசக் கூடாது என்றனர், என அவள் கூறக் கேட்டதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/157&oldid=708001" இலிருந்து மீள்விக்கப்பட்டது