பக்கம்:முல்லைக்கொடி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இ. புலவர் கா. கோவிந்தன்

"ஏடி பெண்ணே ! உன் பெற்றோர் உனக்குக் கூறிய கட்டளையை நீ கூறினாய்; அதற்கு அடங்கி நடக்கவும் விரும்புகின்றாய்; நனிமிக நன்று. அதைப் போலவே, நானும் என் பெற்றோர்க்கு அடங்கி நடக்க விரும்புகிறேன். எனக்கு என் பெற்றோர் இட்ட கட்டளை என்ன தெரியுமோ? கண்டவர் உள்ளத்தில், கண்டவுடனே காமத் தீ மூளுமாறு நோக்கவல்ல கண்களையும் விளையாத கரும்பு வனப்புறத் தீட்டப் பெற்ற தோள்களையும் உடைய மகளிரைக் கண்டால் அவர்களை விடாதே; அவர்களைக் காதலித்துக் கடிமணம் புரிந்து கொள்! என்பதே அவர் இட்ட கட்டளை. ஏடி! நான் அதன்படி நடந்து கொள்ள வேண்டாவோ?’ என்றான்.

அவன் சொல் அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது. "ஏடா! உன் பெற்றோரும், அவர்கள் உனக்குக் கூறிய அறிவுரையும் நன்று நன்று!" என நகைத்தாள். பின்னர், "ஏடா? மகளிரைக் கண்டால், அவரை வழிமறித்து நிறுத்தி, அவர் மீது காதல் கொண்டு, அவர் பல்லழகையும் தோளழகையும் புகழ்ந்து பாராட்டு என்ற நனி மிக்க நல்லற வழி காட்டியுள்ளனரே! நன்று அவர் திறம்! அன்னார், என் பெற்றோர்.பால் சென்று, என்னை மணம் பேசி முடிப்பதில் மிகவும் வல்லவர் போலும்!” என அவனையும், அவன் பெற்றோரையும் இகழ்வாள் போல் கூறினாள்.

உள்ளத்தில் காதல் கொண்டு, உதட்டில் பகையுடை யாள்போல் கூறிய சொல் கேட்டு, அவனுக்கு நகைப்பதா, அழுவதா என்றே தோன்றவில்லை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் அவள் நடிப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/158&oldid=708002" இலிருந்து மீள்விக்கப்பட்டது