பக்கம்:முல்லைக்கொடி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 157

வெளியாக்க விரும்பினான். "ஏடி! எவரும் வெளியில் தலைகாட்ட இயலாவாறு கொடிய வெய்யில் காயும் உச்சிப் பொழுது இது இளங்கன்றுகள் வெய்யில் வெப்பத்தால் தளர்ந்து வருந்தும்; அதனால், இந்நேரம் கன்று மேய்ப்பதற்குத் தகுதியற்ற காலமாய் இருக்கவும், கன்றுகளை ஒட்டி வந்து மேய்க்கும் உன்னைக் கண்ட என் பெற்றோர், உன் காதல் உள்ளத்தை உணர்ந்து கொள்ளாரோ? உணர்ந்து கொண்ட அவர்கள், தங்கள் மகனாகிய எனக்கு உன் வருகையை உரையாரோ? இதை அவர்கள் உரைக்காது போயின், அவர் உறவு உறவாக மதிக்கப் பெறுமோ?” எனக் கூறி அவள் உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் காதலைப் புலப்படுத்தினாள்.

அதற்கு அவள் எதுவும் விடையளிக்கவில்லை. ஆனால், "ஏடா! நீ கூறியது முற்றும் உண்மை; அது உண்மை என்பதை நானும் அறிவேன்; நன்று; இனி உன் பேச்சை விடு!” என அதை ஏற்றுக் கொள்ளாதவள் போல் கூறினாள்.

புறத்தில் பொய்க் கோபம் காட்டுகிறாளாயினும், அவள் உள்ளம் இசைந்து விட்டது என்பதை உணர்ந்தான்். அவன் காதலுக்குத் துணிவு பிறந்து விட்டது; உரிமை யோடு, "ஏடி பெண்ணே! இனி உன்னை விடேன். அங்ங்னமாகவும் நான் கூறியவற்றை இன்னமும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? நான் கூறிய அனைத்தும் உண்மை. மேலும் உன் பெற்றோர் கட்டளை என்னோடு பேசக் கூடாது என்பதுதான்ே! சரி, பேச வேண்டாம். பேசக்கூடாது என்றவர்கள், பெண்ணே! அவன்பால் அன்பு காட்டாதே அன்பு காட்டி அவனைத் தழுவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/159&oldid=708003" இலிருந்து மீள்விக்கப்பட்டது