பக்கம்:முல்லைக்கொடி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இ. புலவர் கா. கோவிந்தன்

கொள்ளாதே! என்று கூறவில்லையே! ஆகவே, என்னைத் தழுவுவதில் தவறு இல்லை. அருகில் வந்து அன்போடு அணைத்துக் கொள்வாயாக. உன் வாயில் ஊறும் தேன் நீர் உண்டு மகிழ்ச்சி கொள்கிறேன் நான்!” எனக் கூறிக் கொண்டே அவளை அணுகினான்.

அவன் காதல் பேச்சு அவளுக்குக் களிப்பூட்டி விட்டது. ஆயினும், இன்று காதலிக்கும் இவன் நாளை கைவிட்டால், நம்நிலை என்னாவது என எண்ணினாள்; அவள் சிந்தனை செயலாற்றத் தொடங்கி விட்டது. "நெஞ்சே! இவன் கூறியது எத்தன்மையவோ? உறுதி உடையவோ? அல்லது அழிந்து போகவல்லவோ?’ என்று ஐயுற்றுக் கலங்கினாள். அது சிறிது பொழுது. காதல் வெறி மிகவே, ஒரு முரட்டுத் துணிவு கொண்டாள். "பொய்யுரைத்துப் பழகிய இப்பொதுவன் உரைத்த உறுதி மொழிகள் உண்மையுடையவாயின், அவனை மணந்து மனையறம் ஏற்று மாண்புறுவேன். அவ்வாறில்லாமல், அது பொய்யாகிப் போயின், அதனாலும் கேடில்லை. அவன் உள்ளத்தில் காதற் கனலை மூட்டி, அதனால் அவன் அணிந்த மாலையும் வெந்து கருகுமளவு அவன் உடல் நலத்தைக் கெடுக்கும் என் கண்கள் நாளை அவன் கைவிட்டால் கலங்கிப் பசலை படர்ந்து பாழாகும்; என் தோள்கள் மெலிந்து தளரும். என்றாலும் இன்று ஒரு பொழுது, அவனோடு பெறும் இன்பத்தால், அவை கவின் பெற்றுக் காட்சி அளிக்கும் அல்லவோ? அது ஒன்றே போதும். அவன் கைவிடினும், இவ்வொரு நாள் இன்பத் தால், காலமெல்லாம் மகிழ்ந்திருப்பேன்." என, இவ்வாறு தனக்குள்ளே எண்ணித் துணிந்து அவன் காதலை ஏற்றுக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/160&oldid=708004" இலிருந்து மீள்விக்கப்பட்டது