பக்கம்:முல்லைக்கொடி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி $. 167

அந்நிலையில் என்னை ஏதிலாள் போலவும், நான் கூறிய உண்மை யுரையைப் பொய்யுரை போலவும் கருதியதில் வியப்பில்லை; தன் நெஞ்சைத் தான்் அடிமை கொள்ளாது, அதற்கு அடிமைப்பட்டுப் போன ஒருவனுக்கு, ஏதிலார் யார் - இனியார் யார், பொய்யுரை எது - மெய்யுரை எது எனத் தெரிந்து கொள்ளும் தெளிவான அறிவு எங்கே வாய்க்கப் போகிறது!" எனக் கூறிச் சலிப்புற்றாள்.

அவள் கூறிய சுடுசொல், அவன் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. வருவேன்; வழிவிடு!" எனக் கூறிய அவள் சொற்கள் உண்மைச் சொற்களே; ஏமாற்றுரை அல்ல என்பதை இளைஞன் உணர்ந்தான்். தன் உள்ளம் உணர்வு பெற்றதை அவளுக்கு உரைத்தான்்; அவள் விரும்பிய வாறே, அவளுக்கு வழிவிடவும் விரும்பினாள்; ஆனால், அந்நிலையில், அவர்கள் முன்னே மேய்ந்து கொண்டி ருக்கும் மாட்டு மந்தையில் அவன் கண்ட காட்சியால், அவன் மனம் மீண்டும் மாறி விட்டது.

இடிபோல் ஒலிக்கும் குரலும், போர் வெறியும் மிக்க ஒரு கொல்லேறு, பெண்ணெருமை ஒன்றைக் கண்டு, அதன் மீது கொண்ட காதலால், அதையே சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்து விட்டான். அக் காட்சி அவன் உள்ளத்தில் அடங்கிய காமவெறியை மீண்டும் தூண்டி விட்டது; விலகி நின்று வழிவிடக் கருதியவன், மீண்டும் வழி மறித்துக் கொண்டு, தான்் கண்ட காட்சியை அவளுக்கும் காட்டிப், "பெண்ணே! பொழுதும் போய் விட்டது; வீட்டிற்குப் போகாது இங்கிருத்தல் இனியும் இயலாது; ஆனால் குறைப்பட்ட உள்ளத்தோடு போவதும் பொருந்தாது. ஏற்றையும், இள நாகையும் கண்ட உனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/169&oldid=708013" இலிருந்து மீள்விக்கப்பட்டது