பக்கம்:முல்லைக்கொடி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இ. புலவர் கா. கோவிந்தன்

இன்று போக வழிவிடு!" என அவள் கூறியதை ஏமாற்றுரையாக எண்ணி விட்டான். அதனால் அவளை விட மறுத்தது அவன் உள்ளம். ஆனால், தன் கருத்தை அவ்வாறே அவளுக்குக் கூறின், அவள் தன் மனத்தின் குறைபாடு கண்டு, மதியாது வெறுத்து விடுவாளோ என அஞ்சினான். அதனால், வழிவிடு எனக் கூறி நிற்பாளுக்கு, வழிவிடாது நின்றவாறே, "பெண்ணே! என் வேண்டு கோளை ஏற்று, என் காதலுக்கு உடன்பட்ட நீ, போக வேண்டும் என்பதற்குக் கூறும் காரணம் முற்றிலும் சரி. உன் சொற்கள் இனிமை பயக்கின்றன என்பதை நான் உணர்கின்றேன்; உணர்ந்து, உன்னைப் போக விடவும் துணிகிறேன். ஆனால், அதற்கு என் உள்ளத்தின் உடன் பாடும் வேண்டும். ஆனால், அதுவோ, காம மிகுதியால் அறிவிழந்து கிடக்கிறது. அதனால், காதலி நாளை தவறாது வருவள்; அவள் சொல்வதை நம்பி, இன்று போகவிடு எனக் கூறும் என் கட்டளையை ஏற்க மறுக்கிறது. அது. அதனால் நானும் உன்னைப் போக விடுவதற்கில்லை!" எனத் திறம்படக் கூறித் தடுத்து நிறுத்தினான். -

அவனைத் தன் காதலனாக உளமார ஏற்றுக் கொண்டு, மறுநாள் வருவதற்கு உண்மையிலேயே இசைய வும், அவன் அதை ஏற்றுக் கொள்ளாது, தான்் ஏதிலாள் போலவும், அவன் உள்ளமே உறவுடையது போலவும் கருதித் தன் சொல்லை நம்ப்ாது, தன்னைப் போகவிட மறுக்கும் அவன் செயல் கண்டு அவள் சினம் கொண் டாள். சினம் வெறுப்பாக மாறிற்று. "ஏடா! காமவெறி உன் உள்ளத்தை மிகவும் கலக்கி விட்டது; அதனால் உன் உள்ளத்தை அடக்கி ஆளும் ஆற்றலை நீ இழந்து விட்டாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/168&oldid=708012" இலிருந்து மீள்விக்கப்பட்டது