பக்கம்:முல்லைக்கொடி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 165

அதுகேட்ட அவன், "நீ யார் என்று இவள் என்னைக் கேட்டாள்; அதன் பின்னரே நான் இன்னான் என்பதை அறிவித்துக் கொண்டேன். ஆனால் நான் இவளைப் பற்றி எதுவும் கேட்கவில்லை; அவ்வாறாகவும் இவள் தன்னைத் தான்ே அறிமுகம் செய்து வைத்தாள்; அதுமட்டுமல்லாமல் தன்குலப் பெருமையையும் பாராட்டிக் கூறுகிறாள்; ஆகவே என்னைப் போன்றே இவளும் என்னைக் காதலிக் கிறாள். 'உனக்கு மனைவியாகும் மாண்புடையவள் நான் ! எனக் கூறாமல் கூறுகிறாள்," என இவ்வாறு எண்ணினான். அதனால் அவனுக்குச் சிறிது அதிகமாகவே துணிவு பிறந்தது. அதனால் அவளை அணுகி, "அவ்வாறாயின், பெண்ணே! உன்னோடு சிறிது நேரம் இருந்து பேசி மகிழ் வதில் குற்றம் இல்லை என எண்ணுகிறேன்." என்றான். அது கேட்ட அவள், "ஏடா! நீ விரும்புமாறு சிறிது பொழுது இருந்து பேசி மகிழ்வதில் குற்றம் இல்லை; அதில் எனக்கும் விருப்பமே!” என இசைந்து விடையளித்தவள், பொழுதாகி விட்டதாலும், தாங்கள் நெருங்கி நின்று பேசுவதைப் பிறர் பார்த்து விடுவர் என்ற அச்சத்தாலும், "ஆயினும், ஏடா! அதற்கு இப்பொழுது நேரம் இல்லை, நாளைக்கு வருகிறேன்; இப்போது போக வழி விடு!" எனக் கூறிப் போக முயன்றாள்.

அவனை ஏமாற்றிப் போய்விட வேண்டும் என்று அவள் கருதவில்லை. உண்மையில், பொழுதும் போய் விட்டது, பிறர் காண்பதற்கும் ஏதுவாம் என்ற அச்சம் காரணமாகவே அவள் போக விரைந்தாள். ஆனால் காம வெறியால் கருத்திழந்து நிற்கும் அவனால் அதை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அதனால், நாளை வருகிறேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/167&oldid=708011" இலிருந்து மீள்விக்கப்பட்டது