பக்கம்:முல்லைக்கொடி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ஒ. புலவர் கா. கோவிந்தன்

திடுமெனத் தோன்றி, வழி மறித்துக் கொண்டு, வாயில் வந்தனவற்றைக் கூற நீ என்ன பித்தேறினவனோ?” எனக் கேட்டுவிட்டாள்.

அவன், அவள் தளர்ச்சியைத் தடுமாற்றத்தைக் கண்டான். தன்னை இன்னான் என அறியாமையால் வந்தது அது என எண்ணினான். அதனால், "பெண்ணே! நான் இவ்வூர் ஆட்டினத்து ஆயர் குடியில் வந்தவன்; பகை கண்டு அஞ்சாது பெரும் போர் புரியவல்ல ஆட்டுநிரை பல கொண்ட குடி நான் பிறந்த குடி!" எனத் தன்னை இன்னான் என அறிவிக்கும் முகத்தான்், தன் குடிப் பெருமையையும், குறிப்பாகக் காட்டிப் பெருமை கொண்டான்.

நீ யார் என்று தான்் கேட்க, அதற்கு அவன் இன்னான் என அறிவிப்பதோடு நில்லாது, தன்னுடைய குலப் பெருமை கூறிப் பாராட்டக் கேட்ட அவளுக்கும் பொறாமை மிகுந்தது. அவன் குலத்தினும் தன் குலம் தாழ்ந்ததன்று; மாறாகச் சிறந்ததே என்பதை அவனுக்கு அறிவுறுத்த விரும்பினாள். உடனே, "ஏடா! உன் உடைமை களாய அவ்வாடுகள் அஞ்சாது போர் புரியவல்ல ஆற்றல் வாய்ந்தனவேனும், அவை புல்லினம் எனப் பழிக்கப் பெறும். நீ அப் புல்லினத்து ஆயர்குடியில் பிறந்தவன். ஆனால் நானோ நல்லினத்து ஆய்ச்சி, அதிலும் நல்லினம் எனப் பாராட்டப் பெறும் ஆக்களின் இயல் பறிந்து, அவற்றைப் பார்த்த அளவிலேயே, அவை தரும் பால் அளவினை வரையறுத்துக் கூறவல்ல குடஞ்சுட்டு ஆயர்குடியில் வந்தவள் நான். அறிந்துகொள்!" எனக் கூறினாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/166&oldid=708010" இலிருந்து மீள்விக்கப்பட்டது