பக்கம்:முல்லைக்கொடி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி ஒ 163

மறைய, மாலைப்பொழுதும் வந்து விடவே, அவன் விரைவு அதிகமாயிற்று. அவன் ஆசைக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அவளைப் பிரியாது, இடைவிடாது பின் தொடர்ந்து திரிந்திருந்த தோழிப் பெண்களும் அவளைத் தனியே விடுத்துப் போயினர்; அவள் தனித்திருந்தாள். அதனால், அவன், அவள் முன் திடுமெனத் தோன்றி, அவள் புற அழகையும் அக நலத்தையும் பாராட்டி விட்டுப், "பெண்ணே உன்மீது கொண்ட காதல் நோய் என்னைப் பற்றி வருத்துகிறது. என்னைக் காத்தல் உன் கடன். அந் நோயினின்றும் பிழைத்து நான் உயிர் வாழ ஒருவழி காட்டிவிட்டு அப்பாற் செல்!” எனக் கூறி வழிமறித்தான்்.

அம் மேய்ப்புலத்தில், அவள் அவனை அதற்கு முன்னர்ப் பலமுறை பார்த்துள்ளாள்; பார்த்தது மட்டு மன்று, அவன், தன் ஆடல் பாடல்களில் கலந்து கொண்டு, துணைபுரியக் கண்டு, அவன்மீது சிறிதே காதலும் கொண்டிருந்தாள். ஆனால், ஆடிடங்களில் பார்த்துள் ளாளே யல்லாது, அவன் யார், அவன் பெற்றோர் யாவர் என்பன குறித்து எதுவும் அவளுக்குத் தெரியாது. அவனைத் தனிமையில் கண்டு, அவன் யார் என்பதை அறிய வேண்டும் அவன் அன்பைப் பெற வேண்டும் என்ற ஆசை அவளுக்கும் உண்டு; ஆயினும், அவன் இவ்வாறு திடுமென வந்து வழிமறித்துக் கொள்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை. அதனால், அவனைக் கண்டதும் சிறிதே நடுங்கிவிட்டாள். அவள் அறிவும் நிலை தடுமாறி விட்டது. அதனால், "ஏடா! நீ யார்? உன்னை иштейт இன்னான் என்று அறியேன். அறியாதிருப்பார் முன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/165&oldid=708009" இலிருந்து மீள்விக்கப்பட்டது