பக்கம்:முல்லைக்கொடி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 奪 புலவர் கா. கோவிந்தன்

நாளடைவில் அவளை மனைவியாகப் பெற்று மகிழத் துடித்தது அவன் உள்ளம். ஆனால் அதற்கேற்ற வாய்ப்புக் கிட்டாது அவன் வருந்தினான். அவன் உள்ளத்தைப் பற்றி வருத்திய அக்காதல் நோய், இன்னுஞ் சிலநாள் சென்றால் அவன் உயிரையே அழித்து விடுமளவிற்கு வளர்ந்து விட்டது. இனி வாளா இருந்து பயன் இல்லை; இதற்கு ஒரு வழி காண வேண்டும் எனத் துணிந்தான்்.

மறுநாள், வழக்கம்போல் அவள் வந்தாள். மாடு களை மேய விட்டாள். வயிறார மேய்ந்த மாடுகள், கானாற்று நீர் குடித்து, அவ்வாற்றின் கரைக்கண் வளர்ந் திருந்த மரநிழலில் படுத்து ஓய்வு கொண்டன. மாடுகளை மேயவிட்ட அவள், தன்னைப் போன்று ஆங்கு வந்திருக்கும் தன் தோழிப் பெண்களோடு கானாற்று மணலுக்கும், அதன் கரைக்கண் உள்ள குளிர்ந்த மலர்ச் சோலைக்கும், அதை அடுத்திருந்த அகன்ற பாறைக்கும் ஓடி, ஆடியும் பாடியும் மகிழ்ந்தாள். முல்லை, குருந்தம் போன்ற மலர்களைப் பறித்து மாலையாகக் கட்டிக் கூந்தலில் சூடிக் கொண்டாள். இளைஞன், அவளையும், அவள் தோழிமாரையும், நிழல்போல் பின்தொடர்ந்து சென்று, அவர் ஆடல் பாடல்களில் கலந்து கொண்டு அகமகிழ்ந்தான்். ஞாயிறு மறையும் பொழுதாயிற்று. பகலெல்லாம் அவள் பின் திரிந்து ஆடியும் பாடியும் மகிழ்ந்தமையால் அவன் காதல் நோய் முன்னிலும் அதிக மாயிற்று; அதைத் தாங்கிக் கொள்வது அவனால் இயலாது போயிற்று, அதனால், அவனுக்குத் துணிவு பிறந்துவிட்டது. அவளைத் தனித்துக் கண்டு, தன் காதலைக் கூறி, அவள் அன்பைப் பெறத் துணிந்தான்். இந்நிலையில் ஞாயிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/164&oldid=708008" இலிருந்து மீள்விக்கப்பட்டது