பக்கம்:முல்லைக்கொடி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

எல்லை வருவான் விடு!

ஆவும் ஆனேறும் ஒம்பி வளர்க்கும் ஆயர்குடியில் வந்த ஒர் இளம்பெண், நாள்தோறும் தன் ஆனிரைகளைக் காலையில் ஒட்டிச் சென்று, காடுகளில் மேயவிட்டு, மாலையில் வீடு திரும்பும் வழக்கம் மேற் கொண்டிருந் தாள். அவ்வூரில் வாழ்ந்த ஆட்டிடையர் குடியில் வந்த ஒர் இளைஞன், அவளைப் போலவே, தான்ும் தன் ஆட்டு மந்தையை, அவள் செல்லும் காட்டிற்கே ஒட்டிச் சென்று மேய்க்கும் வழக்கம் மேற்கொண்டிருந்தான்்; ஒரு நாள் ஆனிரையின் பின்வரும் அவளைக் கண்டான். பார்த்தவர் கண்களைப் பறிக்கும் பேரழகு வாய்ந்த பருத்த தோள்கள், கண்டவர் கருத்தைக் கவரும். கவின் மிக்க கண்கள், நாட்டவர் போற்றும் அவள் நற்பண்பு ஆகிய அவள் நலங்கள் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன; அவள் மீது மாறாக் காதல் கொண்டான். அன்று முதல், ஒவ்வொரு நாளும் அவள் வருகையை எதிர் நோக்கியிருந்து, அவள் வந்ததும், அவளழகைக் கண்டு மகிழத் தொடங்கினான்.

முல்லை-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/163&oldid=708007" இலிருந்து மீள்விக்கப்பட்டது